422. யேசுவின் வருகையை யறிந்தவுடன் சென்றன ளிவர்க்கெதிர் மாாத்தாளே யேசுவந் திருந்தும் பின்செலாதே வீட்டினி லிருந்தாள் இளையவளே யேசிடம் வரவே யுரைத்தனளே என்சகோ தரன்மரி யாதிருப்பான் நேசராம் நீரிவ ணேயிருந்தால் நிச்சயஞ் சுகமடைந் திருப்பனென்றான். 423. இப்பொழு துமேநீர் கடவுளிடம் இனிதொடு கேட்பதோ யேதெனிலும் அப்பனே யுமக்கருள் புரிகுவரே யெனஅறிந் திருக்கிறேன் என்றனளே தற்பர னிவ்வுரை செவியுறவே தயவொடு முரைத்தன ரிம்மொழியே எப்படி யுமேயுன் சோதரனே உயிர்த்தெழு வானெனச் செப்பினரே. 424. ஆவியே பிரிந்ததா மோர்சடலம் அழிந்துமண் ணாகவே போயினுமே தாவியே வருமோர் தினமாவி யழிந்ததன் சடலம் தானடைய ஆவியே யடைந்ததா மச்சடலம் அழிவகன் றுமேசீ வன்பெறுமே மேவியக் கடைநாள் வருமெனவே யறிந்துமெய் விசுவச முள்ளவள்யான். 425. அந்தவோர் நாளுமே வரும்பொழுதே அப்படி யென்சகோ தரன்மரணப் பந்தம றுந்தகன் றுயிர்த்தெழுவான் பண்பொடு மறிவேன் என்றுரைத்தாள் இந்தவி தமேமார்த் தாளுரைக்க யேசுவே பகர்ந்தார் மறுமொழியாய் சந்தத மென்றும் நிலைக்குமொரு சத்திய போதகம் பகர்ந்தனரே. 426. நானே யுயிர்த்தெழல் சீவனுமென் றுறைக்கிறே னுனக்கே நலமொடுமே வீணல எனைவிசு வசிப்பவனோ எவனுமே வீய்வதில் உயிர்த்தெழுவான் வாணாட் டினத்தினி லெனையொருவன் வகையொடு விசுவசித் தாலவனே காணான் மரணமே யென்றென்றும் காண்பா யிதைவிசு வசிக்கிறாயோ. 427. அப்படி யேயென தருமை யாண்டாய் ஆம்நம் புகிறே னும்வாக்கே இப்புவி யினில்நிசம் வருவரெனதரிசிய ரியம்பிய வார்த்தை யேபோல் மெய்ப்பர னானவர் கடவுளது மிகவுயர் திருச்சுதன் கிறிஸ்து நீரே தப்பிலா விசுவச முடையவள்யான இருநிசம் எனவுரைத் ததனள் மார்த்தாள். |