11. கெருவமே கொண்டவ ரிணக்கமிலார் கீழ்ப்படி தலில்லா மானுடரே திருப்புவன் நீதியுள் சிறந்தவரின் சீரிய வுயர்நல ஞானமிடம் கருத்தொடு கர்த்தரை வழிபடுமோர் கர்த்தருக் குகந்தராம் பிள்ளைகளாய் அருமையா முத்தம ஜனமதையே ஆயத் தஞ்செயுவான் என்றான். 12. இப்படித் தூதனி சைக்கவுமே யிதைவிசு வசியாச் சசரியாவே எப்படி யாமிது நடப்பதுண்டோ இதனையா னறிவது மெதுவிதமோ தப்பிலை யேயிதோ யான்வயதில் அதிமூப் படைந்தோன் தளர்ந்தவனே அப்படி யேயெனின் மனைவியுமே அதிமூப் படைந்தவள் எனமொழிந்தான். 13. தேவதூ தனோமறு மொழியுரைத்தான் தெய்வச முகமதில் நிற்பவன்யான் ஏவலா லுனதிட மிறங்கிவந்தேன் எனதுட பெயரோ காபிரியேல் ஆவலா யுனதிட முரைப்பதற்கே ஆர்மகிழ் வளிக்குஞ் செய்தியிதை பாவமே யிழைத்தனை யிதுதருணம் பார்த்திபன் வாக்கிதை நம்பாதே. 14. "நிறையுறு வாமிது வாக்கினையே நிசநிசம் தக்கவோர் காலமதில் அரைகுறை யல்லவுன் அவிஸ்வாசம் உனதவிஸ் வாசமோ மாபெரிதே நிறைவடைந் தேதினம் பூர்த்தியுற நிசமிது நேரிடும் நாளளவும் குறைவடை வாய்நீ யூமையனாய் கூடிய திலையுனாற் பேசுதற்கே". 15. கூறிய தூதனும் மறைந்தனனே குன்றுமோ அவனுட உரையதுவே நேரிட அக்ஷண மவனுரையே நேர்ந்ததே யதுக்ஷண மூமையனே தேறியே தன்னூ ழியமதையே திட்டமாய் நிறைவுற முடிப்பதற்குள் ஏறியே நேரமே கடந்துசெல அங்கிருந் தவர்வியப் படைந்தனரே. 16. ஆச்சரிய மோடே வந்தவனே ஆசிகூ றுதற்காய் வாய்திறக்க பேச்செதும் பிறந்ததில் வாயினின்றே பேச்சிலான் கரமதாற் சைகைசெய ஆச்சரி யமானார் மண்டபத்தில் காத்தவ ணிருந்தவத் திரள்ஜனங்கள் காட்சியோர் தரிசன மாலயத்திற் கண்டனென் றறிந்தார் சபையினரே! 17. திரும்பினன் சகரியா தனதகமே திருப்பணி விடைநாள் தீர்ந்தவுடன் இருக்குமத் தினங்களி லெலிசபெதே இறைவனி னுறைபோற் கர்ப்பிணியாய் அருளுமே புரிந்தனர் கடவுளென்மேல் அகற்றியே யெனதிழி வென்றனளே இருந்தன ளெலிசபெத் தனதகத்தே யெவணுமேயக லாதைந்து திங்கள். |