73. வந்தவர் திரள்சனம் வீதிவழி வாழத்தியே யார்த்தனர் பின்தொடர்ந்தே அந்தமா நகருள பாலகரும் சேர்ந்தவ ரோடே யார்ப்பரித்தார் இந்தநற் பாலகர் வாயினின்றே இன்பசங் கீதமே யோங்கியதே அந்தநற் பாலகர் கைகளிலே யாடிய தேகுருத் தோலைகளே. 74. ஆலய மெங்குமே யார்ந்ததுவே யன்னவ ரோசனாக் கீதத்தால் ஆலயத் தினிலே வந்தனரே அங்கமற் றோர்பல ரந்தகரும் ஆலயத் தினிலே வந்தவர்க்கே யீய்ந்தன ரங்கமுங் கண்களுமே ஆலயத் தர்ச்சகர் மற்றவரும் அன்பரின் மேற்சின மாயினரே. 75. கேட்கிறீ ரோஇவர் வார்த்தைகளை கேட்டுமே கவனியா திருப்பதேனோ கேட்கிறே னிவர்துதி கீதமெல்லாங் கேட்டதை யுவப்பொடு மேற்கிறேனே கேட்டதும் பார்த்தது மில்லையோநீர் கேண்மின் சுருதியின் வாக்கிதையே கேட்குமே தோத்திர துத்தியமே கேண்மை யார்பாலகர் வாயினின்றே. 76. அங்குளே யெங்கணும் பார்த்தனரே யாலயத் துள்ளவை யாவையுமே எங்குமே வந்தவர் துன்படைந்தோர் எவர்க்குமே நன்மை புரிபவராய் அங்குள யெவையும் பார்த்தபினால் அந்தியே கடந்துரா நெருங்கியதால் அங்கிருந் தகன்றே பெத்தனியில் லாசரு அகமே யடைந்தனரே. இறுதி வார ஊழியம் திங்கள் 134. கனியில்லா அத்தி.மத். 21 18 & 19்; மாற். 11 : 12 - 14. 77. எல்லையில் லாதவோர் காருணியன் காலையி லெழுந்தே திரும்பினரே பல்லாயிரம் பேர்பசி தீர்த்தோராம் தற்பரன் மிகப்பசி யடைந்தனரே தொல்லைநீக் குதற்கே வகைதேட யூதரின் சபைபோற் றோன்றியதே பல்லாயிர மாமிலை யுளதாய் ஓங்கியே பரந்தவோ ரத்திமரம். 78. நாடியே வந்தார் கனியதிலே மாயமல் லாதெதுங் கனியிலையே தேடியே பார்த்தார் திரிவருடம் தெய்வப யமந்தோ சிறிதுமில்லை ஓடியே வந்தார் தருவிடமே யாதொரு கனியோ அதிலில்லையே ஆடியே யொலித்தவா மிரையிலாதே ஆனதோ அவர்பசிக் கிருந்ததில்லை |