14. கன்னிமரி யம்மன்மண மாகுமுனே கண்யமுறு தன்னனையின் வீட்டினுளே தன்னந்தனி யாகவொரு நாளினிலே தனித்தியானஞ் செய்திருக்கும் வேளையினிலே மின்னுமொளி மேனியுள காபிரியேல் மேன்மைமிகு தூதனுமே தோன்றியுமே கன்னிமரி மனங்கலங்கி யச்சமுற கண்யமுறு வாக்குமேமொ ழிந்தனனே. மங்கள வாக்கு வேறு 15. "மாதரின்சி ரோமணியே மாகிருபை பெற்றவரே மாதரசி யானவரே மாதருளே யாசிபெற்றீர் மாதயையார் கர்த்தரேயும் மோடிருக்கின் றார்நலமாய் மாதயையால் நீவிரேதாம் வாழ்க" வென்றே வாழ்த்தினானே. 16. கன்னிமரி யம்மனேநீர் உட்கலங்கி யஞ்சவேண்டாம் மன்னுமகா தெய்வமுடை மாக்கிருபை பெற்றதாலே கன்னியரா மங்கையரே கர்ப்பவதி யாகுவீர்மெய் என்னாளும் மாவெழிலாம் பாலனையே பெற்றெடுப்பீர் 17. இவருக்கோ ஜேசுவெனும் இன்பநாமஞ் சூட்டுவீரே அவரோமே லோராவார் உன்னதரின் மைந்தனாவார் அவர்தாதா வாந்தவீதின் ஆசனமே யானதைத்தான் அவருக்க ளிப்பரேமா அன்புதெய்வங் கர்த்தரேதாம். 18. அவர்முனோன் யாக்கோபுட அங்குடும்ப மானவரை அவர்தாமே யென்றென்றுமே ஆண்டுவரு வார்நிசமாய் அவர்ராஜ்ஜி யத்துக்கொரு அந்தமிரா தென்றுமென்றும் அவர்கொள்ளும் மாட்சியே யடங்குவதில் லோரெலையுள். வேறு 19. இதுவித உரையவர் செவியுறவே எதுவிதம் நடைபெறும் இயல்பலவே "அதுவிதம் நடைபெறல் எதுவிதமாம் அறிந்திலேன் புருடனை" யெனமொழிந்தார் இதுவித உரைதனை மொழியவுமே இதுவித மொழிகளை யியம்புவதேன் இதுவிதம் நடப்பதற் இதுபெரிதோ இறைவனாம் அதிவல கடவுளாலே. |