பக்கம் எண் :

302

 

115.       வேண்டினான் சத்துரு எனைவிரும்பி யுங்களைப் புடைக்கவே வெகுபலமாவ்
              ஆண்டுள வீண்பத ருகற்றவுமே கோதுமை மணிகளைப் போலவாமே
              வேண்டினே னேபரிந் துனக்காயே யுன்விசு வசமே யொழியாதே
              மீண்டுசோ தரரைத் திடப்படுத்து நீமனந் திரும்பியே யதன்பினாலே.

116.       காவலோ சாவுமோ எதுவரினும் மாசடுஞ் சோதனை வந்துறினும்
              ஆவலாய்ச் செலவே யுமதுபின்னா யத்தமே யானெனப் பேதுருவே
              சேவலே கூவுமுன் னிருதரமே திட்டமா யானறி யேனெனவே
              மேவிமுந் நேரமே மறுதலிப்பாய் மெய்மெயே யிவ்விரா என்றனரே.

117.       மறுதலி யேனுமை யாண்டவரே மாட்சியார் கடவுளின் திருச்சுதனே
              வெறுப்பதி லென்னுட போதகரே மேன்மை நிறைந்த குருபரனே
              மறுதலி யேனுமை யோர்பொழுதும் மாறேன் சொல்கிறேன் எனவுரைத்தான்
              மறுதலி யேமுமை யாண்டவரே என்றுரைத் தார்மறு சிசியருமே.

118.       பணஞ்சா மான்யை பாதரட்சை பிறிதொரு பொருளுமே யெதுமிலராய்
              சணப்பொழு தேனுமே தாமதியா தவசர மொடும்நீர் போமெனவே
              அனுப்பிய காலையி லுங்களுக்கே அணுவள யெனுங்குறை யிருந்ததுண்டோ
              அணுவள வெனுங்குறை யாதுமில்லை யனைவரு முரைத்தா ருறுதியாயே.

119.       உள்ளவன் யாதுமே பைகளையே யெடுத்தே யுவப்பாய்ச் செலுமிப்போ
              இல்லதோன் ஏதொரு பட்டயமே யிருக்கிற வத்திரம் விற்றதனால
              கொள்ளுக யாதொரு பட்டயமே கொடியதோர் காலமே வரும்நிசமே
              சொல்லிய வாக்குமே யெனைக்குறித்தே நிறைவுறப் போகிற தேசீக்கிரம்.

120.       இவருமே யக்ரமக் காரருளே யொருவரென் றெணப்படு வார்எனவே
              அவமதிப் பொடுசொலும் வசனமெனில் அவசியம் நிறைவுற வேண்டியதே
              இவணமே குருபரன் பகரவுமே இருக்கிற திவணொரு பட்டயமென்
              றவர்களு முரைக்கவே மறுமொழியாய் அமலனோ பகர்ந்தனர் போதுமென.

156.இறுதி உரையாடல். யோ. 14 - 16. முடிய
1. தேற்றரவாளன்.
யோ. 14.

121.       இன்னுமே தொடுத்தனர் குருபரனே யினியதாம் வசனமே சிசியருக்கே
              கன்னியே யுமதுட இருதயமே கலங்கவேண் டியதில் விசனமாயே
              மன்னுமா மகிபராங் கடவுளின்மேல் வையுமெப் பொழுதும் விசுவாசம்
              என்னுட பேரிலு மதுவிதமே வையுமெப் பொழுதும் விசுவாசம்.