155.சீடர் இடறல் - பேதுரு மறுதலிப்பு முன் கூறல். மத். 26 : 31 - 35; மாற். 14 : 27 - 31; லூக். 22 : 31 - 38; யோ. 13 : 31 - 38. 109. மகிமையே யடைகிறா ரிதுதருணம் மனுமக னாமவ ரிதுமுதலே மகிமையே யடைகுவ ரவர்மூலம் மகிமை வான்பரன் கடவுளுமே மகிமையே யடைகிலோ கடவுளுமே மகிமைசெய் குவர்தந் திருமகனை மகிமைசெய் குவரவர் துரிதமென அகமகிழ்ந்து ரைத்தனர் குருபரனே. 110. இன்னுமே சொற்பக் காலமேதான் இருப்பதும் மோடியான் பிள்ளைகளே என்னையே தேடுவீர் ஆயினும்யான் செலுமிடம் வரமுடி யாதுமாலே முன்னொரு காற்சொனேன் யூதருக்கே முடிவிலு மறுதர மிதுவசனம் சொன்னேன் யானுமக் கிப்பொழுதும் இருப்பீர் திடமொடுஞ் சோர்விலாதே. 111. ஒருவரி லொருவரன் பாயிருமின் உமில்யா னன்புகூர்ந் ததேபோலே ஒருவரி லொருவரன் பாயிருமென் றொருபுதுக் கற்பனை யீய்கிறேனே ஒருவரி லொருவரன் பாயிருந்தால் உலகினுக் கேயருஞ் சாட்சிகளே அறிவரே யனைவரும் நீவிரெலாம் அருமை யாமென் னுடசீடரே. 112. எங்குபோ கிறீரோ ஆண்டவரே யென்றுமே கேட்டனன் பேதுருவே அங்கிப் பொழுதென் பின்வரவே கூடா தப்பாற் பின்வருவாய் அங்கிது பொழுதே யான்வரவே யாகாக் காரண மானதென்னோ இங்கிதோ எனதுட சீவனையும் ஈய்ந்தருள் வேனுமக் கிதுதருணம். 113. கொடுத்தருள் வாயோ வுனதுயிரைக் குருபர னாமெனக் கிதுதருணம் தொடுத்ததோர் திருமறை யெழுத்தேபோற் றோடுவேன் மேய்ய்பனை வெட்டுவேனே எடுக்குமே யோட்டமச் சணமறிகள் இவணவ ணெவணுமே யோடிவிடும் நடக்குமே யதுவிதம் நழுவுவீரே யிடறியே யிவ்விரா என்னிமித்தம். 114. உமக்குமுன் செல்கிறேன் சலிலிநாடே யுயிர்த்தெழுந் ததன்பினால் என்றனரே உமதுட நிமித்தமா யனைவருமே யிடறியே யொருமித் தோடினுமே உமதுட நிமித்தமா யெதுவரினும் ஒருபொழு துமேயிட றேனென்றான் உமதுட நிமித்தமா யிடறாயோ இனுமுனக் குரைப்பதைக் கேள்கவனம். |