103. ஆண்டவ ரருள்மார் மேற்சாய்ந்தே யருளனு மவரை வினவினனே ஆண்டவா அவனெவன் என்றுரைக்க அருளொடு மருளனுக் கறைந்தனரே ஈண்டிதே துணிக்கையை யான்கொடுக்கப் பெறுபவ னெவனோ அவனறிவாய் ஆண்டவர் துணிக்கையைத் தோய்த்தனரே கொடுத்தன ரதையூ தாசிடமே. 104. துணிக்கைப் பெறவே யன்னவனுள் துரிதமாய்ப் புகுந்தான் சாத்தானே துணிவொடு செய்வாய் செய்வதையே துரிதமாய் நீங்கியே யென்றனரே துணிக்கை பெற்றம் யூதாசோ சுருக்காய்ப் பந்திநின் றெழுந்தனனே துணிந்துமே சென்றன னச்சணமே குணமில் லாச்சக ரிடமேதான். 105. விண்டவ ருரைத்ததின் விவரமுமே யறிந்திலர் பந்தியி லிருந்தவரே பண்டிகைக் கவசியப் பொருளெதுவும் பரிவொடு வாங்கவே பகர்ந்தனரோ அண்டையிலு ளரெவர் தரித்திரருக்கே அவசிய நன்மை செயவெனவோ அண்டையி லிருந்தவர் சிலர்நினைந்தார் அகன்றனன் யூதாச் அவணிருந்தே. 154.திருவிருந்து நியமனம். மத். 26 : 26 - 29; மாற். 14 : 22 - 25; லூக். 22 : 17 - 20. 106. அப்பமே யெடுத்தார் தங்கரத்தி லாசியே செய்ததைப் பிட்டனரே செப்பியே யவரிது வசனமேதான் கொடுத்தார் பதினொரு சீடருக்கே தப்பிலா துமக்காய்ப் பிடப்படுமென் சரீரமா யிருக்கிற தேயிதுவே இப்பொழு திதைப்பெறு மிதைப்புசியும் எனைநினைப் பகற்கா யிதைச்செய்யும். 107. பாத்திர மெடுத்தன ரப்படியே பரவச மொடுபுசித் தானவுடன் தோத்திரஞ் செய்துது தித்தனரே கசியறக் கொடுத்தனர் சீடருக்கே போற்றியே பருகுவீ ரெனதுடைய புதுவுடன் படிக்கையின் ரத்தமிதே ஆத்திர மொடுமுமக் காய்ப்பலர்க்காய் யருள்மனிப் புறும்படி சிந்தியதே. 108. இதிலே பானமே செய்குவீரே எனதுட வசனஞ் செவிகொடுமின் இதிலே பானமே செயும்பொழுதே எனைநினைந்திதை நடத்துவீரே புதியயென் தந்தையின் ராச்சியத்தில் புதிதாம் ரசம்யான் பருகும்வரை இதையா னினிப்பரு குவதிலையே யெனவுரைக் கிறேனுமக் குறுதியாயே. |