153. காட்டிக் கொடுப்பவன். மத். 26 : 21 - 25; மாற். 14 : 18 - 21; லூக். 22 : 21 - 23; யோ. 13 : 18 - 30. 97. உமதனை வரையுமே குறித்தியானே யுரைத்தே யிலையிதே வசனமேதான் உமதுளே யான்தெரிந் துள்ளவரை யுறுதியா யறிந்திருக் கிறேநிசமாய் உமதுளே யொருவனே குருவெனையே யுறுதியாய்க் காட்டுவான் சத்தியமே எமதொடு மமர்ந்துமே பந்தியிலே யிருக்கிறா னிதுநிசம் அம்மனுடன். 98. என்தனோ டப்பம் புசிப்பவனே யெனதுமேற் குதிகா லெடுப்பனென முந்தியே மாமறை வசனமே தான் உறுதியாய் மொழிவது மறிவீரே இந்தவு ரைப்படி யெனக்குமிதே யிரவினில் நடக்குமே நிசநிசமே முந்தியே சொல்கிறேன் நடக்குமுனே முடிவினில் யானவ ரெனஅறிய. 99. என்தனி னூழ்யனை யேற்பவனோ என்னையே யேற்பவ னாகுவானே என்தனை யேற்பவ னாரெனினும் ஏற்பவ னென்னைய னுப்பினோரை என்தனி னாவிக லங்குதிப்போ ஏங்குதே யென்மன மென்னுள்ளே என்தனை யுங்களி லோர்மனுடன் காட்டியே கொடுப்பா னிவ்விரவில். 100. அவ்வித மவர்க்கவர் சொல்லவுமே யடைந்தன ரவர்களே மிகுதுயரம் ஒவ்வொரு மனுடனுங் கேட்டனனே உண்மையோ யானோ யானோதான் இவ்விட மிருப்பவன் தாலத்தில் என்னொடுங் கரம்விடு பவனேதான் இவ்விதம் மனுமகன் போகிறாரே யெழுதிய படிதிரு மறையினிலே. 101. எந்தமா னுடன்மனு மைந்தனையே யிதுவிதங் காட்டியே கொடுப்பனெனில் அந்தவோர் மனுடனுக் கைய்யைய்யோ அவன்பிற வாவிடில் நலமென்றார் அந்தவி தமேயூ தாசவனும் யானோ ஆண்டவா என்றனனே தொந்தமா யவரையே கேட்கவேநீ சொல்லிய படியே யென்றனரே. 102. இப்படிக் காரியம் நடைபெறும்போ தெண்ணமிட் டனரே பன்னிருவர் ஒப்புமோ ஈதுசெய் பவனெவனோ என்றொரு வரையொரு வரேநோக்கி அப்பொழு தன்பனே யவருடைய மார்பினிற் சாய்ந்திருப் பதையறிந்தே அப்பொழு தன்பரை வினவவுமே பிற்றரன் பரிடமே சிமிட்டினானே. |