90. முழுகின னாமொரு மனுடனுமே முழுவதுஞ் சுசியே யடைந்தவனே கழுவுத லவசியங் கால்களையே கரந்தலை கழுவுத லவசியமில் முழுவதுஞ் சுசியே யடைந்தவர்நீர் முழுவது மலநீ ரனைவருமே பழுதுள னொருவனங் கிருந்ததினால் பகர்ந்தன ரனைவரு மிலையெனவே. 91. முடித்தனர் கழுவியே கால்களையே மூடிய பழந்துணி களைந்தனரே எடுத்தனர் தரித்தனர் தமதுடையே தம்முட இடத்தினி லமர்ந்தனரே கொடுத்தனர் தமதுட போதனையே தூயமா திரியன ஒழுகுவீரே படியுமே யெனதுட தாழ்மையே பற்றுவீ ரெனதுமுன் மாதிரியே. 92. ஆண்டவன் மாரெனு மரசர்களே பறசனத் தவரையாள் பவருளரே ஆண்டவன் மாரதி பதிகளுமே யாட்சியா மதிகா ரம்முளோரோ ஆண்டுமே மாகொடு கடினமாயே யவருப காரிசு ளெனப்படுவார் வேண்டிய திலையே யதுவுமக்குள் வெறுப்பி ராகா தவையுமக்கே 93. இருப்பா னாகவோர் பெரியவனே எளியதோர் சிறியவ னாகவுமே இருப்பா னாகவோர் தலைவனுமே எளியகோர் பணிவிடை யாளெனவே பெரியவன் பந்தியி லிருப்பவனோ பெரியவன் பணிவிடை செய்பவனோ பெரியவன் பந்தியி லிருப்பவனே பெரியவ ருமக்கே யான்நிசமே. 94. மெய்யோ எசமான் தன்னைவிட மேலோன் பணிவிடை செய்பவனோ மெய்யோ அனுப்பினன் தன்னைவிட மேலோன் அனுப்பப் பட்டவனோ மெய்யே யுமக்கியா னாண்டவரே மெய்யே பணிவிடை செய்தேனே மெய்யிதை யறிந்தே செய்குவீரேல் மெய்யே யிதுசெயில் பாக்கியரே. 95. எனக்கே வந்துள சோதனைகள் எவற்றிலும் நிலைத்தவர் நீவீரே எனக்கோர் ராச்சியம் என்பிதாவே யினிதொடு மேற்படுத் தியதேபோல் உமக்கோர் ராச்சிய மேற்படுத்தி யுவப்பொடு மருள்வேன் நிசமுமக்கே எமதுட ராச்சியப் பந்தியிலே யெனதொடும் போசன மருந்துவீரே. 96. அந்தமா ராச்சியம் வரும்பொழுதில் அடைகுவீ ரதிமிகு மேன்மையுமே அந்தமாய்த் தோன்றுவீ ராசராயே யமருவீர் சிம்மா சனங்களிலே சொந்தமா மிசரேல் சனத்தவரை துவாதசக் கோத்திரத் தார்களையே அந்தமாய் நீதியே செய்வதற்கே யமருவீர் ஞாயமே தீர்ப்பவராய். |