84. இட்டமா யுமக்கியா னுரைக்கிறேனே யிங்கினிப் புசிப்பதில் யானிதையே திட்டமாய் பரமராச் சியத்தினிலே செவ்விதா யிதுநிறை வேறும்வரை இட்டமா யெடுத்தனர் பாத்திரமே யின்பொடு தோத்திர மேசெலுத்தி எட்டியே கொடுத்தனர் சீடருக்கே யெடுமிதைப் பகிர்ந்தே பருகுமென்றார். 152.எவன் பெரியவன்? கால்களைக் கழுவுதல். லூக். 22 : 24 - 30; யோ. 13 : 2 - 17. 85. பந்திலி லமர்கிற வேளையிலே பன்னிரு சீடரோ டேபரனே முந்தியே யமர்ந்தான் சானென்போன் முன்னவன் மார்பினிற் சாய்ந்தனனே முந்துவோ னெதெனிலும் பேதுருவோ என்னதே முதலிடம் என்றனனே முந்தியே வந்தவன் யானலவோ யான்முதல் என்றான் அந்திரேயா 86. இந்தவி தமேசொலப் பிறசிசியர் இசலினர் பதறியே பேசினரே முந்திய விடமென தெனதெனவே முனிந்தே தர்க்கமே புரிந்தனரே சந்தத மணிந்தவர் மனவமைதி யுலகினிற் செனித்தவர் தாழ்மையாயே பந்தியி லிருந்தே யெழுந்தனரே தரித்தனர் பணிவிடை வேடமுமே 87. பழந்துணி தமதரை தரித்தனரே பாத்திர சலங்கர மெடுத்தனரே பழமை யுணரா மதியிலரை பன்னிரு வரையே யணுகினரே முழந்தாள் முடக்கிப் பணிவொடுமே முட்டினி லிருந்தே யடிவரைக்கும் களங்கமே சிறிதுமில் லாவிதமாய் கால்பதங் கழுவியே துடைத்தனரே. 88. வந்தனர் பேதுரு விருக்குமிடம் வகையொடு பதங்கால் கழுவவுமே அந்தவி தமேயென் புதங்கால்நீர் கழுவுத லுமக்கா காதெனவே இந்தவி தமேயவன் மொழியவுமே யிசைத்தா ரிதனுட ரகசியமே அந்தமா யிதுபொழு திதையறியாய் அறிகுவை யதையே யிதன்பினென்றார். 89. கழுவலே கூடா தோர்பொழுதும் எனதுட கால்களை யென்றனனே கழுவவு மிலையோ யானுனையே யெனதிடங் காணாய் பங்குனக்கே கழுவுதல் போதா தாண்டவரே யெனதுட கால்களை மாத்திரமே கழுவுவீ ராண்டவா என்சிரமும் கழுவுமென் கைகளும் என்றனனே. |