வியாழனிரவு 151.பட்கா. மத். 26 : 17 - 20; மாற். 14 : 12 - 17; லூக். 22 : 7 - 18. 77. வந்ததே பட்காத் தினமாம்நாள் வந்தனர் சிசியரே யவரிடமே இந்தநாட் பட்காப் பலியேயா மெவ்விட மொழுங்கே செயவென்றார் இந்தநீ ரிருவரும் நடந்துசெலும் பேதுரு அருளனு மிருவருமே உந்தியே நகருளே செல்வீரே உம்மேதிர் வருவா னொருமனுடன். 78. தண்சலக் குடமே சுமப்பவனே தன்னெச மானகஞ் செல்பவனே பின்செலு மவன்செலும் வழியாயே பிறிதொரு வழியே யேகாதீர் திண்ணமா யவன்புகு மகமடைந்தே தீர்க்கமாய்ச் செல்வீர் வீட்டினுளே கண்ணிய னகத்தின் தலைவனிடம் காரியங் கருத்தொடு சொல்வீரே. 79. எனதுட வேளையே வெகுசமீபம் இத்தினத் தினிலிப் பட்காவே எனதுட சிசியரும் யானுமொன்றாய் இனமொடு தனித்தே புசிப்பதற்காய் உனதுட லகத்தினிற் றகுந்தவிடம் எவணுள தெனவுமை வினவவுமே இனமொடு மெமதுட ரபீயெமையே யிவணுமே யனுப்பினா ரெனச்சொல்வீர். 80. வீட்டினி லுளதோர் மேலறையே யதிமிகு வசதியா மறையினிலே போட்டிருக் குமேயதிற் கம்பளங்கள் புசிப்பதற் குகந்ததா மிடமொன்றே காட்டுவா னறையில் நீரொழுங்கே கடிதினில் நடத்துமென் றனுப்பினரே வீட்டினுட்பு குந்துகண் டாரதேபோல் பலிவிருந் தைத்தயார்ப் படுத்தினரே. 81. நெருங்கின தவருட தருணமுமே யிந்நில லோகமே விட்டகல நெருங்கின தவருட தருணமுமே நேசபி தாவிடஞ் சென்றமர நெருங்கின தவரது சமையமுமே நித்தியர் சித்தமும் பூர்த்தியுற நெருங்கின தவரது சமையமுமே மெய்யொரே பட்கா ஆகவுமே. 82. நெருங்கிய வந்தத றிந்தனரே நீசனாந் துரோகியின் வேளையுமே அறிந்துமே யிருந்தனர் யாவையுமே யவரிருந் தனரா யத்தமாயே தெரிந்துமே பட்காப் பலியிதையே சீடரோ டேபுசித் தேமுடிக்க தெரிந்துகொண் டிவராஞ் சிசியரொடே சென்றவர் பந்தியி லேயமர்ந்தார். 83. புசித்தனர் தமதுட சிசியரோடே பொருந்திய பட்காப் போசனமே புசிக்குமத் தருணஞ் செப்பினரே அருமையாம் பொன்னிலும் மேல்வசனம் புசிக்கவே யுமதொடு மிப்பட்காப் பொருந்திய வாஞ்சையே ளக்கதிகம் புசிக்குமென் கடைப்பட் காவிதூவே மிகுபொலாப் பாடுகள் யான்படுமுன். |