பக்கம் எண் :

திரு அவதாரம்295

 

70.        மறுதின மடுத்ததோர் தினத்திலுமே மரியாள் மார்த்தாள் லாசரொடும்
              இருவறு வருடனுங் குருபரனார் இருதினங் கழித்தன ரமைதியாயே
              எருசலேம் பதியினுக் ககலாதும் பிறிதெதும் புரியா தமர்ந்தனரே
              எருசலேம் பதியினி லமைதியில்லை எதிரிகள் மனமுமே யமர்ந்ததில்

150. எருசலேம் சதியோசனை துரோகி.
மத். 26 : 3 - 5; மாற். 14 : 1, 2, 10, 11, லூக். 22 : 1 - 6.

71.        கூடினர் சனத்தின் மூப்பருமே கொடுமனக் காய்பா அரண்மனையில்
              நாடினர் பெரியவாச் சாரியரும் நடுநிலை நீங்குபா ரகரெல்லாம்
              கூடின ரவர்பெருஞ் சங்கமாயே கொலைசெயத் தற்பரன் திருமகனை
              தேடினா பலவகை மார்க்கமுமே திடமொடும் யோசனை யினிலாழ்ந்தார்.

72.        எண்டிசை யிருந்துங் குழுமியராம் இத்திரள் சனங்களே யடர்ந்துளதாம்
              பண்டிகை யிதிலே பிடிப்பதினாற் பதறியே கலகமும் புரிவரிவர்
              கண்டமே வருமேனத் தெரிந்தவரே கவலை கொண்டவரா யிருக்கையிலே
              அண்டிவந் தனனோர் கெடுதுரோகி யவரிடந் தனிமையாய் யூதாசே

73.        பணப்பையே சுமந்தவன் பணக்கணக்கே கவனமாய் விசாரணை நடத்துவோனே
              பணத்தினில் நிதமுமே பழகியதால் பணப்பே யாலே யலைக்கழிந்தோன்
              குணமுமே யழிந்தவன் கெடுதுரோகி குடியைக் கெடுக்கவே துணந்தவனே
              தனக்குமெப் பொழுதுமே நலம்புரிந்த தனதுட குருவினுக் கேதுரோகி.

74.        கணமிதி லோயுமே யுங்கவலை தீர்க்கவே வந்துளேனே
              சணத்தினற் காட்டியே கொடுபபேன் உமதுட சத்துரு யேசுவையே
              பணமோ பாதலம் மட்டும்செலும் பணமே யென்னுட வாஞ்சையுமே
              பணமெனக் கெவ்வள வளிப்பீரோ பகருவீர் என்றனன் தோசியவன்.

75.        காட்டுவே னென்றனை யுறுதியாமோ கபடுமே யாதுமே யிதிலிலையே
              காட்டிக மாகந டத்துவையோ தடையெது மேயிலை காசுதர
              கூட்டமில் லாததோர் தருணத்திற் குணமொடு காட்டிக் கொடுப்பையோ
              வாட்டமில் லாதே தருவோமே வகையொடு காசுமுப் பதேயென்றார்.

76.        இப்படி யிசைக்கவே யிவர்களுமே சென்றன னிணங்கியே தோசியிவன்
              எப்படி யிதையான் முடிப்பேனோ எப்பொழு தடைகுவே னப்பணமே
              தப்பியே போகா திப்பொருளே தக்கவோர் முயற்சியே செய்குவேனே
              எப்போ சமையமே கிடைக்குமென ஏங்கியே யிருந்தான் தோசியிவன்.