பக்கம் எண் :

294

 

65.        எப்பொழுது கண்டுளேம்ப சித்தவராய் எப்பொழுதோ கண்டுளேந்த வித்தவராய்
              எப்பொழுது கண்டுளேமோ ரந்நியராய் எப்பொழுது கண்டோமோ உடையின்றி
              எப்பொழுது கண்டுளேமோ நோயராயே யெப்பொழுது கண்டுளேமே காவலிலே
              இப்படியி ருக்கவேயொத் தாசையுமக் கெப்பொழுது செய்யாதே போனமென்பார்

66.        எப்படிநீர் தள்ளியேயிச் சின்னவரி லெவற்குமேநீர் செயவிலையோ யேதெனினும்
              அப்படியே தள்ளியேநீ ரென்னையுமே யெனக்கதையே செய்யவில்லை நீவிரென்பார்
              இப்படியே யீகையிலாத் தீயரிவர் இழிநித்ய ஆககினையை யேடைவார்
              அப்படியே யன்புளராம் நீதிமான்கள் அழிவிலாசீ வன்பெறவும் செல்வரென்றார்.

67.        வினவியதஞ் சீடரேய றிந்துகொள விதவிதவு தாரணங்க ளொப்பனையால்
              இனமொடுமே தாம்வருநாட் டோற்றத்தை யெலுசலேமி னந்தநாட்கு றிப்புகளை
              மனதினிலே தாமிருத்தித் தங்களையே வருந்தினத்திற் காப்பதற்காயச் செப்பினரே
              இனிச்சமீப நாளினிலே நேர்வதையும் இதமொடுமே சீடருக்கே செப்பினரே.

148. மரணத்தைப் பற்றிய கடைசியறிவிப்பு. மத். 26 : 1, 2

68.        காடுசெல்போக் காடுபட்கா வாமறிகள் காரியமார் பூபவமே தீர்ப்பவரே
              ஆடெனத்தம் மைப்பலியா யேபடைக்கும் அந்நாளும் நெருங்குவத றிந்தவரே
              சீடருக்குச் செப்பினரி ரண்டுநாட்பின் திவ்யபட்காப் பண்டிகையா மன்றுதெய்வ
              ஆடெனுக்கு ரூசில்மனு மைந்தனுமே மாளயூத ரொப்புவிப்பா ரென்றறைந்தார்.

செவ்வாயிரவு புதன் வியாழன்
149. பெத்தனி
வேறு 

69.        திருப்பலி மறியாங் குருபரன்தந் திருவுப தேசமே முடிவடைய
              இருவறு சிசியரோ டெழுந்திருந்தே யெழில்பெறு மொலிவமா மலையினின்றே
              அருகுபெத் தனிப்பதி யடைந்தனரே யருளொடு நண்பரி னகமடைந்தே
              மருவறு மனத்தினர் இரவினில்நிம் மதியொடு சுகம