60. பார்த்துளேமெப் போதுமைப் பசித்தவராய் தீர்த்துளேமோ வும்பசியா காரமீய்ந்தே தீர்த்துளேமெப் போதுமது தாகத்தை தீர்த்தமுமக் கேகொடுத்தோ மெப்பொழுதோ சேர்த்தரவ ரணைத்துளேமெப் போதுமையே திக்கிலாவோ ரந்நியனாய்க் காண்டதுண்டோ போர்த்ததுமெப் போதுமையே யாடையினால் மேற்புடவை யில்லாராய்த்தி ரிந்ததுண்டோ? 61. அறிந்ததுமெப் போதுமைப்ப டுக்கையினில் நோயராயுங் காவலிலே கைதியுமாய் திரிந்துதேடி வந்ததுண்டோ உம்மையுமே திட்டமாய றிந்திலேமென பாரிவரே சிறியவரென் சோதரரில் யாவனுக்குஞ் செய்தநன்மை யாதெனினு மேயதையே பெரியதாக என்தனுக்கே செய்ததென மாபெரிதாய்ச் சொல்லுகிறேன் என்றுரைப்பார். 62. நோங்குவரி டப்பாகமே நிற்பவரை நோக்கியேசொல் வார்சபிக்கப் பட்டவரே நீங்களொரு நன்மையுமே செய்தறியீர் நீங்குவீரே யிங்கிருந்தே யென்முனின்றே ஆங்கொடிய பேய்க்குமவன் தூதருக்கு மாயத்தமே யானநித்ய அக்கினியுள் போங்களும்பங் கிதையேநீர் தேர்ந்துகொண்டீர் பூவுலகில் நீரிருக்குங் காலத்தில் 63. இருந்தேனு ணவிலாதே மாபசியாய் போசனந்தந் தென்பசியே தீர்த்ததுண்டோ? இருந்தேனே மாகொடிய தாகமாயே வார்த்துசலந் தீர்த்ததுண்மோ என்தாகம் திரிந்தேனே யாருமண்டா அநநியனாய்ச் சேர்த்தரவ ணைத்ததுண்டோ அன்பொடுமே இருந்தேனே யாடையில்நிர் வாணியாயே மூடினீரோ ஆடையா லிரக்கமொடே. 64. வருந்தினேனே நோயினாற்ப டுக்கையிலே தேடிவந்து மேவிசாரித் தீரோநீர் இருந்தேனே கைதியாயே காவலிலே வந்தெனையி ரக்கமொடே தேற்றினீரோ அறிவீரி வற்றிலேது மேசெயாதே நீரசட்டை யாயிருந்தீர் என்பரவர் அறிந்திலேமே யாண்டவனே யாதெனினும் யாமசட்டை யாயிரோம றிந்திருந்தால். |