பக்கம் எண் :

292

 

147. பலனடைதல், நியாயத்தீர்ப்பு.மத். 25 : 31 - 46.

55.        உருவகமாய்ச் செப்பினர்தம் வருகையினி லுண்மையாய்ந டப்பவையே சீடருக்கே
              வருவரேமா மனுமகன்தம் மகிமையொடே வன்மையுள தூயவராந் தூதரொடே
             இருப்பரேதம் மகிமைமிகு மாசனமேல் வீற்றிருப்பார் மாட்சியுறு வேந்தனவர்
             வருவரிதோ அவர்சமூகம் மாந்தரெலாம் வந்தவரே தம்பலன்க ளேபெறவே.

56.        நிறுத்துவரே யாசனமுன் னாலவரை நிறுத்துவரே வலப்புறமி டப்புறமாய்
             பிரிப்பரவர் ஆடுகளை மேய்ப்பனுமே பிரிப்பதுபோல் மறிகளைவெள் ளாட்டினின்றே
             நிறுத்துவரே செம்மறிக்கொப் பானவரை நிரைநிரையாய் வலப்பாகம் வாழ்வடைய
             நிறுத்துவர்வெள் ளாடுகளே போன்றவரை நிரைநிரையா யிடப்பாகந் தாழ்வடைய

57.        பார்ப்பரேமா ராசனவர் அன்பொடுமே பாக்கியராம் வல்லபாகம் நிற்பவரை
              ஆர்ப்பரிப்பாய்ச் சொல்லுவரே ராசனவர் பிதாவினாலா சீர்வதிக்கப் பட்டவரே
              கேட்பீரும் வாழ்வினையே சொல்லுகிறேன் கீழுலகே தோன்றியதாம் நாள்முதலே
              ஏற்படுத்தப் பட்டுமேயா யத்தமான மேலெழில்ராச் யத்தையேசு தந்தரிப்பீர்

58.        இருந்தேனு ணவிலாதே மாபசியாய் எனக்குணவே யீய்ந்தீரே யின்பமொடே
              வருந்தினேனே மாகொடிய தாகத்தால் எனதுடதா கந்தீர்த்தீர் நீர்வார்த்தே
             திரிந்தேனே யாருநாடா அந்நியனாய் அரவணைத்தீர் சேர்த்தெனையே யன்பொடுமே
              இருந்தேனே யாடையில்நிர் வாணியாயே யிரக்கமொடு மூடினீரே யாடைதந்தே.

59.        வருந்தினேனே நோயினாற்ப டுக்கையினில் தேடிவந்து மேவிசாரித் தீரெனையே
              இருந்தேனோர் கைதியாகக் காவலிலே வந்தெனைநீர் தேற்றினிரி ரக்கமொடே
              அருந்தவமா யிவ்வளவுஞ் செய்தெனக்கே யாற்றினீரே நல்லதொண்டே யென்பரவர்
              அறிந்திலேமே யாதுமிவை செய்ததாயே யீதலாமே யல்லவென்பார் நீதிமான்கள்.