50. வந்தனனோர் தாலந்தே பெற்றவனும் வணக்கமிலாத் தீயவனா மூழியனே இந்தோவோர் தாலந்தே யும்மதுவே யிதையெடுத்து கொள்வீரே தந்ததேபோல் அந்தோவி தைக்காநி லத்தினில்நீர் அறுப்பவர்தெ ளிக்காத வோரிடத்தில் எந்தவித முஞ்சேர்க்கும் மாகடின இருதயமுள் ளோரெனவே யானறிவேன். 51. பயந்தேயித் தாலந்தை யான்தொடவே பயனிலாவிந் யோகமேசெய் வேனெனவே அயலகனா மாருமதைக் கன்னமிடா ததைப்புதைத்தே வைத்திருந்தேன் பத்திரமாய் பயமகன்றே யிச்சமையங் கொண்டுவந்தேன் இதன்கணக்கைப் பார்த்துமேயொப் புக்கொளுவீர் தியங்காதே யானுயவே விட்டுவிடும் இதுபொழுதே தீர்ந்ததெனின் பாரமென்றான். 52. சொன்னதொரு உத்தரவோ ஆண்டவனாற் சுட்டெதுவே யூழியனின் நெஞ்சத்தை என்னசொனாய் தீயவனா மூழியனே யெப்பொழுதுஞ் சோம்பனாயி ருந்தவனே என்னையேசொன் னாய்விதைவி டாததான ஏதிடமு மேயறுப்பே னென்றறிந்தாய் பின்னுமேதெ ளிக்காவி டத்தினிலே மாபிரியத் தோடுசேர்ப்பே னென்றறிந்தாய். 53. பொட்டெனவே வட்டிபெற என்பணத்தைப் போட்டிருப்பின் காசுக்கடைக் காரரிடம் வட்டியொடும் பற்றுவேனே யட்டியின்றி வந்தவுடன் என்னுடைப ணத்தையுமே நட்டமுமே செய்தனாமித் துட்டனுக்கே நான்கொடுத்த தாலந்தை யேயெடுத்தே எட்டியேகொ டுப்பீரே நீவிரதைப் பத்துத்தா லந்துளனா மாந்தனிடம். 54. உள்ளவனுக் கின்னுமேகொ டுக்கப்படும் உண்மைபரி பூரணமு மேயடைவான் உள்ளதுமெ டுக்கப்படும் உண்மையிதே யில்லதோனி டத்திருக்கும் யாவுமேதான் எவ்வளவு மேபயனு மற்றவனே போடுவீர்பு றம்பிருளி லிம்மகனை கள்ளமல்ல அங்குளதாங் கஸ்தியேதான் மாகடினம் பற்கடிப்ப ழுகையேதான். |