பக்கம் எண் :

290

 

45.        ஒருவனைந்து தாலந்தே பெற்றவனோ ஓரைந்து பிறிதுமேசம் பாதித்தான்
              இருதாலந் தேயடைந்த வூழியனோ இன்னுமிரு தாலந்துசம் பாதித்தான்
              ஒருதாலந் தேயடைந்த வூழியனோ ஓர்முயற்சி யுஞ்செயாத சோம்பனேதான்
              ஒருவருக்கு மேதெரியா வோரிடத்தி லேயொழிந்தே பூமியிர்பு தைத்தனனே.

46.        திரும்பியெச மான்வரப்பன் னாட்கழிந்தே திரவியமே பெற்றவரைத் தன்னிடமே
              வருத்தியேயன் னோருடக ணக்குகளை வகையொடுவி சாரணையே செய்தனனே
              ஒருவனைந்த தாலந்தே பெற்றவனே யொரேமனதாய் வர்த்தகமே செய்தவனே
              பிறிதைந்து தாலந்துங் கொண்டுவந்தான் பிரியமாயுத் தாரமுமே செப்பினனே

47.        தந்ததாந்தா லைந்துகளே யைந்ததனால் ஆயினனே தனவந்தன் வர்த்தகத்தில்
              இந்தோஇவ் வைந்துமேயான் தேடியதே யென்னுடதா லந்துகளா மைந்தாலே
              இந்தவிதஞ் செய்தவனா மூழியன்மேல் ஆண்டவன்சந் தோடமடைந் தானினிதாய்
              உன்தனுட நன்முயற்சி மாநலமே யுண்மையுள உத்தமனா மூழியனே.

48.        இருந்தனையே கொஞ்சத்தி லுண்மையாயே யிருத்துவேன நேகமேலே யாதிபனாய்
              திருத்தமொடே யுன்தனெச மானனது மகத்துவசந் தோடமுளே செல்வாயே
              வருத்தமேது மில்லையேயு னக்கினிமேல் மகிமையோடு வாழ்ந்திருப்பாய் என்றனனே
             இருதாலந் தேயடைந்த மற்றவனும் அண்டியெச மானிடஞ்சந் தோடமாயே

49.        இருதாலந் தேயடைந்தே னாண்டவனே பிறிதிருதா லந்துசம்பா தித்தேனே
              பொறுந்தினதுன் புத்தியமு யற்சியுமே புனிதமான உண்மையுள்ள ஊழியனே
              இருந்தனையே கொஞ்சத்திலுண் மையாயே யிருத்துவேன நேகமேலே யாதிபனாய்
              திருத்தமொடு முன்தனெச மானனது மகத்துவசந் தோடமுளே செல்வாயே.