பக்கம் எண் :

திரு அவதாரம்289

 

40.        எமதுடைய தீபமணை கின்றனவே எண்ணெயேயில் லாததொரு குற்றத்தால்
              எமக்குதவுங் கொஞ்சமும் தெண்ணெயிலே யென்றிரந்தா ரேமதியில் லாதவரே
              உமக்கதிலே யாங்கொஞ்ச மேகொடுத்தா லுங்களுக்கு மெங்களுக்கும் போதியதில்
              உமக்கெனவே கொள்ளுவீரே போய்க்கடையல் என்றுரைத்தார் புத்தியுளோ ரேயவர்க்கே.

41.        சென்றனரே யெண்ணெய்கொளப் புத்தியிலார் வந்தனர்சீ ராகமண வாளனுமே
              சென்றனரா யத்தமாயி ருந்தவர்சேர்ந் தாரவரோ டேமணவீடே கடைக்கே
              சென்றவரோ வந்துமண வீட்டருகே சேமக்கபா டந்திறக்கத் தட்டினரே
              நின்றவணே கெஞ்சியதற் கோர்பதிலோ நீவிராரோ யாமறியே மும்மையே.

42.        மனுகுமாரன் வரும்பொழுதை நீரறியீர் மற்றுமேயந் நாழிகையு மேயறியீர்
              மனுகுமாரன் வருந்தினம்வி ழித்திராதும் வரும்பொழுதே அறியாதும் நீரிருக்க
              மனுகுமாரன் வரவுமேயன் னோர்முன்னால் மதியிலராங் கன்னியர்போல் நிற்ரே
              மனுகுமாரன் வரும்பொழுது நீரிருமின் மதயுளராங் கன்னியரே போல்விழித்தே

146. தாரந்துகள் உவமை.மத். 25 : 14 - 30.

43.       பரலோக ராச்சியமொப் பானதுவே பரதேசப் பிரயாணஞ் சென்றனுக்கே
              பிரயாணம் போருமுள்ள மேதனக்குப் பிரியமாய்ந டந்தவரா மூழியரை
              வரவழைத்தவ் வூழியரை நம்பியவன் அவர்வசமா யொப்புவித்தான் தன்பொருளை
              திறமைக்கே தக்கதாயே யன்னவர்க்கே திரவியங்கொ டுத்துமேபு றப்பட்டான்.

44.       ஓருழியன் வந்தனனே வந்தனனே யோரைந்தே தாலந்தே பெற்றனனே
              ஓருழியன் வந்தனனே வந்தவனும் ஓரிருதா லந்துகளே பெற்றனனே
              ஓருழியன் வந்தனனே வந்தவனும் பெற்றனனே யொன்றேயோர் தாலந்தே
              ஓரொருவ ராயவரே தம்வழியே போயுலகில் பல்முயற்சி செய்தனரே.