பக்கம் எண் :

288

 

35.        அடிப்பானே தன்னுடைய வுடனூழ்யர் அரவணையா தேயகற்றித் துனபுறுத்தி
              குடிக்கவும்பு சிக்கவுந்த லைப்படுவான் குடியரான புல்லியசி நேகரோடே
              திடுமெனமே யாண்டவனு மங்குவந்தால் அறியாத வோர்தினமோ நாளிகையோ
              கடினமிக வேயடைவா னாக்கினையே இதுவலாதே காரியமும் வேறுளதோ

36.        ஐயோஇன் னோன்முடிவோ மாகொடிதே ஐயோபோ கின்றவிடங் காரிருளே
              ஐயோஇன் னோன்நிலைமை நிர்ப்பந்தமே ஐயோஇன் னோன்கதிய தோகதியே
              ஐயோஇன் னோனடையும் பங்குமேதான் அதிகெடுமாய் மாலராங்கெட் டோரொடுமே
              ஐயோஇன் பங்கினனு போகமுமே யழுகையொடு பற்கடிப்பு மாவேதையே.

145. பத்துக்கன்னியர். மத். 25 : 1 - 13.

37.        ஒத்துளதே ராச்சியமே கன்னியர்க்கே யொருமணவா ளர்கெதிர்கொண் டேகினர்க்கே
              பத்துபேர் கன்னியரெ ழுந்தனரே பரிவொடும ணாளரைச்சந் திக்கவுமே
              புத்தியுளோ ரேயிவரி லைந்தேபேர் புதிதாக எண்ணெயுமே கொண்டுபோனார்
              புத்தியிலா ரானவராம் மற்றவரோ புதிதாக எண்ணெயெடுத் தேகவில்லை.

38.        மணவாளன் பிந்திவர நித்திரையின் மயக்கத்தால் யாவருமே தூங்கினரே
              மணவாள னீதுவந்தார் வாருமென மகிழ்ச்சியாஞ்சப் தந்தொனிக்க நற்றிரவில்
              கணமூடித் தூங்கினராங் கனனியரே கடிதிலெழுந் தாயத்தம் செய்தனரே
              சணமதிலே யேகினரே புத்தியுளோர் தடையிலாதி ருந்தனாலே யெண்ணெயுமே.

39.        புத்தியிலா தோருடதீ வர்த்திகளோ புகைந்தனவே மங்கியேய ணைந்தனவே
              புத்தியிலா தீபமணைந் தேயிருள புதியதாக எண்ணெயேயி லாததினால்
              புத்தியுளோர் கொண்டதாந்தீ வர்த்திகளோ புகையாதெ ரிந்தனபிர காசமாயே
              புத்தியுளோா கொண்டபாத்தி ரங்களிலே புதியதான எண்ணெயேயி ருந்ததினால்