28. எந்நேரங் கள்ளன்வரு வானெனவே வீட்டெசமான் தானறிந்திரு ப்பனெனில் அந்நேரங் காத்திருப்பா னேவிழித்தே வீட்டையவன் கன்னமிட வேவிடானே எந்நேர மோவருவா ரும்மெசமான் என்றறியீ ராதலினால் நீவிருமே எந்நேர மும்விழித்தி ருப்பீரே யும் மெசமா னேவரவே காத்திருமின். 29. பெருந்தீனி பூகவலை யால்வெறியால் பெரும்பாரங் கொள்ளாதே யும்மிதயம் பெருந்தீமை யாமனைத்தும் நீக்கிவிடும் பேரவாவோ டேவிழித்துக் காத்திருமின் வருந்தாதீர் நாள்வருமே நீர்நினையா நாழகையி லப்படியயே மனுமகனும் வருவாரே நீர்நினையா நேரத்தில் வருந்துவார் விழித்திராதார் காத்திராதோர். 30. அந்நாளு மேவருமோர் கண்ணியேபோல் புவியிலுளோ ரனைவரின்மேற் றப்பாதே பின்னாளில் முன்சொனதாங் தீங்கெலாமே பிசகாதே நேரிடுமே தப்புவீரே அந்நாளில் தெய்வசுதன் முன்னிற்க அதிபாத்ர ரென்றுமேநீ ரெண்ணப்பட என்னாளெந் நேரமும்வி ழித்திருமின் இடைவிடாதே வேண்டுதலுஞ் செய்திருமின் 144. உண்மையுள்ள ஊழியன். மத். 24 : 45 - 51; மாற். 13 : 34 - 37 31. நாட்டையேவிட் டோரெசமான் வேறிடமே நாடியேபு றப்படநி னைந்தனனே வீட்டையேவிட் டம்மகான்பு றப்படுமுன் வேலையாட்க ளுக்கதிகிா ரம்மளித்தான் வீட்டினிலே யொவ்வொருவர்க் கேயுரிய வேலையை யொழுங்காயே பார்த்துவர வீட்டையேகாக் கின்றவனா மூழியனே தான்விழித்துக் காக்கவேகற் பிப்பானே. 32. வருவதுமெந் நேரமென ஆரறிவார் வருந்தருண மாண்டவனுக் கேதெரியும் வருந்தருணம் மாலைநடு ராத்திரியோ வளர்சேவல் கூவுகின்ற நேரமோதான் வருந்தருணங் காலையோவி ழித்திருமின் பிடியாதே நித்திரையில் வந்துமையே ஒருதரமோ பல்தரமே சொல்லுகிறேன் உமக்குமேயா வர்க்குமேவி ழித்திருமின். 33. ஏற்றதொரு வேளையிற்றன் னூழியர்க்கே யிதமொடுமே யுணவுகொடுத் தாதரித்தே போற்றுதற்கு ரித்துளவி வேகமுள்ள புனிதனாமுண் மையுளனா மூழியன்யார் ஏற்றபடி யவ்விதமே செய்பவனாய்த் தனதெசமான் வரும்பொழுதிற் காண்பனெனில் போற்றுவதற் கேயுரிய அவ்வூழியன் புகழ்பெறுவா னாண்டவனாற் பாக்கியவான். 34. அந்தவூழி யன்பெறுவா னாண்டவனா லவன்செல்வங் கட்குமேல்வி சாரணையே தந்தவனை யேயுயர்த்து வானெசமான் தவறியேயவ் வூழியன்கெட் டானெனிலோ தந்திரமா யேநடந்தோ னீதுவரை நடப்பானே தாறுமாறாய்த் தப்பிழைத்தே பிந்துமேயாண் டான்வருமோர் நாளெனவே பிதற்றியுமே தன்மனதைத் தேற்றுவனே. |