பக்கம் எண் :

286

 

20.        புலம்புவரே பூவுலகின் கோத்திரங்கள் மனுமகனைக் கண்டுமேக மேல்வரவே
              கலங்காதே நோக்குவீரே நீர்நிமிர்ந்தே களிப்பொடுமு யர்த்துவீரே யுஞ்சிரசை
              இலங்கவுமே யும்முகங்கள் கண்களுமே இனிதுறவே நோக்குவீரும் ரட்சிப்பை
              விலகாதே மாசமீப மானதினால் வியர்த்தமாகப் போகாதும் நம்பகமே.

21.        அவர்தமது தூதரைய னுப்புவரே யதிவலுவாய்த் தொனிக்குமாமெக் காளமொடே
              அவர்செலுவார் பூவுலகில் வானத்தி னொருமுனைதொடங்கிமறு முனைவரைக்கும்
              அவர்தெரிந்து கொண்டவராம் யாவரையும் அவனியிலே யெவ்விடமி ருந்டினும்
              அவர்களுக்குள் யாருந்தவ றாதிருக்க அவர்களைக்கூட் டிச்சேர்ப்பா ரப்பொழுதே.

22.        உவமையிதே கற்றறிந்து கொள்ளுமுயர் அத்திமரம் மற்றமர மாமிவற்றால்
              அவற்றினிலி ளங்கிளைது ளிர்விடவே வந்ததேவ சந்தகால மெறைறிவீர்
              இவையெலாமே நேர்வதைநீர் காணவுமே ராச்சியமி தேசமீப மானதென்றும்
              அவராசனாய் வாசலண்டை நிற்கிறாரே யென்றுமேய றிந்துகொள்ளும்.

23.        மெய்மெயாயே யுங்களுக்குச் சொல்லுகிறேன் இவையின்றே மீட்பிலையிச் சந்ததிக்கே
              ஐய்யைய்யோ ஈதெலாம் டைகுவரே அதன்முன்னி வர்முடிவே வந்துறாதே
              மெய்ப்பொருளை போற்காண்ப வான்புவியும் மெய்யலவே மாறியேவி முந்துவிடும்
              பொய்யாமோ யான் சொலுமிவ் வார்த்தைகளே பொன்றுவதில் லென்றுமேயொ ழிந்துவிழா.

24.        அறிபவனார் வேளையிதை யிப்புவியில் அந்தரவா னத்திலுமே யாருமில்லை
              அறிபவரோ என்பிதாவா மங்கொருவர் அந்தவொரு நாழிகையும் நாளையுமே
              அறிந்திலரே யம்பரத்தி லுன்னதரைத் தாம்பணியு மம்பரராந் தூதருமே
              அறிந்திலரே யொன்றாமோர் மைந்தனுமே யாகையினா லெச்சரிக்கை யாயிருமின்.

25.        நோவாவின் காலமேந டந்ததுபோல் நுட்பமாயே நடக்குமேமனு மைந்தனினாள்
              மேவாது மேநடந்தார் இட்டமேபோல வேண்டுமென்றசட் டைசெய்தா ரெச்சரிப்பை
              மூவாதே நோவைகு டும்பமொடே முன்புசெய்த பேழையினுட் செல்லுமட்டும்
              சாவாதி ருப்பமென எண்ணியேசம் சாரமெனுஞ் சாகரத்தி லாழ்ந்திருந்தார்.

26.        கொடுத்தனரே கொண்டனரே பெண்களையே குடித்தனர்பு சித்தனர்வெ றித்தனரே
              கெடுத்தனரே  கேளிக்கையுல் லாசத்தில் கெடுதிவரு மென்றெணாத மூடராயே
              அடித்ததுவே மாரிபிர சண்டமாயே யனைவரையும் வாரியேய ழித்ததுவே
              அடுத்துமேந டக்குமிவை யப்படியே மனுமசனார் வருமந்த நாளினிலே.

27.        இருமனுடர் நன்செய்யி லிருப்பாரே ஈர்வராயி ருந்தாலு மங்கவரே
              ஒருவனோவி டப்படுவான் மற்றொருவன் நிச்சயமேற் கப்படுவா னத்தினத்தில்
              இருமாத ரேந்திரம றைத்திருக்க ஓர்மகளேற் கப்படுவாள் நிச்சயமாய்
              மறுமாதோ விட்டுமேவி டப்படுவாள் நன்செயினின் றோள்கதியே போலவேதான்.