15. அத்தினத்திற் பட்டயத்தி னால்மடிவார் அவர்சிறைக ளாவர்புற சாதியர்கே அத்தினங்கள் லக்கங்குறை யாதிருந்தால் அவர்களுக்குள் தப்புவனே யாருமுண்டோ அத்தினங்கள் லக்கமோகு றைக்கலாகும் அருளோர்தெ ரிந்தெடுக்கப் பட்டவர்க்காய இத்தலமி திப்பர்புற சாதியரே இன்னவரின் நாள்நிறைவே றும்வரைக்கும். 16. இங்கிருக்கின் றார்கிறித்தென் றேசொலுவார் அங்கிருக்கின் றாரெனவும் சொல்லுவரே இங்கிருக்கின் றார்கிறித்தே யங்கெனவும் யார்சொலியு மிவ்வுரையை நம்பாதீர் இங்கெழும்பு வார்திருட்டுத் தீர்க்கருமே யிங்கெழும்பு வார்திருட்டு மேசியாக்கள் அங்குதெரிந் துள்ளவரு மேமயங்க வஞ்சிப்பார் அற்புதமடை யாளத்தால். 17. இந்தோமுன் னாலறிவி் கின்றேனே யெச்சரிக்கை யாயிருமி னெத்தினமும் அந்தோவ னத்திலிருக் கின்றாரெனில் நீத்புறப்பட் டங்கேபோ காதிருமன் இந்தோஇ ருக்கிறார றைவீட்டுள் ளென்றுசொலின் நம்பியுமே போகாதீர் அந்தோமின் கீழ்த்திசையிற் றோன்றவுமே காண்கிறீர்விர காசமேதன நேர்திசையில். 18. அந்தவித மேமனுமைந் தன் வருகை யகிலமெலா மேதெரிய வந்துறுமே அந்தநாளு பத்திரவ மேமுடிய அடையாளந் தோன்றுமுயர் வானத்தில் அந்தகார மாகுமெழில் சூரியனும் அழகுசந்திர னும்மொளிகொ டாதிருக்கும் அந்தரத்தி லேயுடுக்கள் வீழுமன்றோ அந்தரவான் சத்துவமெல் லாமசையும். 19. பூலோக சாதிகளோ தத்தளிப்பார் மாபொல்லா ஆபத்தெதிர் நோக்கியுமே பூலோக மானுடரி னுள்ளமுமே சோர்ந்துபோகுந் தீங்கையெதிர் நோக்கியுமே மேலோக ராசன்மனு மைந்தனுட மேன்மையடை யாளமேவான் தோன்றுமேமெய் மேலான மாவலமை மாட்சியொடே மேகத்தின் மேல்வரவே காண்பரவர். |