10. சாட்சியேயாம் ராச்சியசுவி சேடமேதான் ஜெகத்திலுள சர்வசன சாதியர்க்கே சாட்சியாயே கூறியறி விக்கப்படும் சகலசன சாதிபாடைக் காரருக்கும் சாட்சியாயே கூறியறி வித்தபின்னால் சகலசாதி கேட்டபினால் நீதியேதான் ஆட்சிசெயும் ராச்சியமே வந்துறவே அதிகடைசி யந்தமுமே வந்துறுமே. 11. தீர்க்கனான தானியேலாந் தர்சியுமே திட்டமாக முன்னமேதான் கூறினானே தீர்க்கமாய்வா சிப்பவனோ யாரெனினும் தீர்க்கமிகச் சிந்தனைசெய் யக்கடவன் பார்க்குமிதோ தூயதல மாமங்கே பாழ்செயும ருவருப்பே நிற்கவுமே மூர்க்கமொடே யாரையுமே வென்றழிக்கும் மூர்க்கசேனை சூழ்ந்துநிற்கப் பார்க்கையிலே. 12. ஒடியேபோம் யூதநாட்டி லுள்ளவரே யோடிமறைந் தேயிருக்கப் பர்வதத்தில் நாடிவர வேண்டியதில் லிந்நகர்க்கே நாட்டினிலே தங்கியேயி ருப்பவரே வீடதின்மே லேயிருக்கும் எம்மகனோ வீட்டினுள்ளி றங்கேலே தும்மெடுக்க நாடியகஞ் செல்லேலு டுப்பெடுக்க நன்செயிலி ருந்தபடி யோடுவாய்நீ. 13. கட்டமுமே மாகொடிதே யத்தினங்கள் கர்ப்பவதி பால்கொடுக்கும் மாதருக்கே கட்டமாரி யோய்தினம்வ ராதிருக்க மாகனிவாய் வேண்டுவீரே வான்பரனை திட்டமாயே முன்னமேவ ரைந்ததேபோல் தீங்கெவாமே வந்துறுமிச் சந்ததிமேல் இட்டமேபோற் செய்தஇவர் தீமைகட்கே யீதுசரிக் கட்டுமோர்நா ளிவர்க்கே. 14. செகதலத்தி லேற்படுமாந் தீங்கனைத்தும் இடுக்கனுமு பத்ரவமும் மாகொடிதே அகங்கரித்த வஞ்சராமிச் சாதியர்மே லமருமாங்கோ பாக்கினையோ சொல்லவொண்ணா இகம்படைத்த நாளமுதலா யின்றுவரை யினிமேலும் பூவுலகி னந்தமட்டும் செகமிதிலே வந்திராத தீமைகளே கொடுறமாயே நேரிடுமே யத்தினத்தில் |