பக்கம் எண் :

திரு அவதாரம்283

 

5.           உங்களுக்குச் சொல்லுகிறே னெச்சரிக்கை நிச்சயமா யுங்களுக்குத் துன்பமுண்டே
              உங்களைநி றுத்துவரே சங்கமுனால் உங்களைய டிப்பரேசெ பாலயத்தில்
              உங்களைய டைத்துசிறைச் சாலையிலே யும்மையுல காதிபர்முன் நிற்கவைப்பார்
              உங்களையே கொல்லுவார்கு ரூரமாயே யுங்களுக்கே யீதெலாமே சாடசியேயாம்.

6.           காட்டுவரே தம்மகரைப் பெற்றவரே காட்டுவார்ச கோதரர்ச கோதரரை
              காட்டுவரே பந்துகளைப் பந்துகளே காட்டுவார்சி நேகிதர்சி நேகரையே
              காட்டுவரே வன்கொலையுஞ் செய்குவரே கண்ணியதம் பெற்றவரைப் பிள்ளைகளே
              காட்டுவிடு வாரநேகர் தாமிடறிப் போயொருவ ரையொருவர் காட்டுவாரே

7.           உங்களைப்ப கைப்பாரே யாவருமே யுபத்திரவத் துக்குமேயொப் புக்கொடுப்பார்
              உங்களையே கொல்லுவரே யீதனைத்தும் உயிரருளென் னாமமாநி மித்தமாயே
              உங்களின்சி ரத்திலுள ரோமமெதும் ஒருபொழுது மேயுதிர்ந்து போவதில்லை
              உங்களுட ஆன்மமதை யும்பொறையால் உறுதியாயே காத்தருளு மெச்சரிக்கை.

8.           வஞ்சகத்த ரீசியரெ ழும்புவரே வஞ்சகமாய்ப் பேசுவரென் னாமமதால்
              வஞ்சகமீ தாலநேகம் பேர்களுமே வாடியுமே சோர்ந்துவிழு வார்நிசமே
              மிஞ்சியுமே போவதினா லக்கிரமம் அன்புமெய்யாய் மங்குமேய நேகருக்குள்
              அஞ்சாதே யந்தமட்டும் யாதுவந்தும் ஆண்மையொடு நிற்பவன்ரட் சிப்படைவான்.

9.           எதிரிகளே யுங்களைப்பி டித்திழுத்தே நிற்கவைப்பா ரேயதிபர் முன்னிலையின்
              எது சொல்வோ மென்னபதிற் சொல்வோமென் றேதுகவல் யோசனையும் வேண்டியதில்
              எதிர்சொலவெ திர்நிற்கவே லாவுரையும் ஒப்பிலாத ஞானமுமே நீர்பெறுவீர்
              யதிற்சொல்வோர் யாவரெனில் நீவிரல்ல பேசுபவர் மெயப்பரிசுத் தாவியரே