142. தெய்வாலய அழகும் அழிவும். மத். 24 : 1, 2; மாற். 13 : 1, 5; லூக். 21 : 5, 6. 178. பெருமையிலான் பெத்தரிக்கம் விட்டவரே யாலயமி ருந்துபிரிந் தார்முடிவாய் பெருமையொடு காட்டினரே சீடரேதாம் பேரழகா மாலயமும் மாட்சியுமே பெருங்கற்கள் வெண்சலவைக் கற்களினால் மாவுயர மாயெழும தன்மதிலை அரும்பொருளாம் பொன்னினாலே மாவழகா யந்தமிகப் பெற்றிலங்கு முப்பரிக்கை 179. வருந்தியேயே ரோதெனுமா மன்னவனால் மாவனப்பா யேயெழும்பு மாலயமே பொருந்தியவாம் பேரழகே கொண்டெவரும் போற்றவேயெ ழில்வனப்பாய்த் தோன்றுதென்றார் திருந்தியவாங் கற்களையி டித்தெறிவார் திண்ணமொன்றின் மேலொன்றி ராதபடி இருந்தவிட மேதெரியா தேயழியும் மெய்மெயேந டக்குமிவை யென்றனரே 180. எத்தனையோ போதனைகள் கேட்டிருந்தா எத்தனையோ நன்மைகளும் பெற்றிருந்தார் எத்தனையோ ஆவலாய ழைத்திருந்தார் எத்தனையோ கண்டனமா யேயுணர்த்தி அத்தனையு மேயவமாய்ப் போனதையோ அன்னவர்தம் மனங்கடின மானதந்தோ இத்தனையு மானபின்தம் மூழியமே யித்துடன்மு டிந்ததென நீங்கினரே. 181. அத்தனுமே நீங்கவுமே யந்நகரை நீங்கியதே யந்நகரின் திவ்யவருள் பெத்தரிக்க மாய்விளங்கு மிந்நகரே பேரழிவுக் காயினதே திண்ணமாயே அத்தனுமே துக்கமிகக் கொண்டவராய் ஆறிருவர் சீடரொடே யேகினரே பொத்தையொலி வேயடைந்த யுச்சியிலே புண்யரால யத்தெதிருட் கார்ந்தனரே II. 5.கடைசிப் பட்காவாரப் பர்வம் முற்றிற்று. |