பக்கம் எண் :

திரு அவதாரம்281

 

173.       கண்களாற்கா ணாதவரே தம்முளத்தாற் கனிந்துணரா திருக்கவேகு ணப்படாதே
              எண்ணமேயான் கொண்டுகுண மாக்குதற்கே சிறிதெனுமி டங்கொடாதே தாங்கெடவே
              கண்களுமே மூடினரா யேயிதயங் கடினமேகொள் ளவிடுத்தார் என்றுரைத்தான்
              எண்ணமிலா ராயிடறி னாரிவரே விசுவசமே யில்லராய்க் கேடடைந்தார்.

174.       அவர்மேலே விசுவசமே வைத்தவராய் அதிபரான ஆட்களோபல் பேரிருந்தார்
              அவர்களேதம் விசுவசம்வெ ளிப்படவோ அறிக்கையிட வோமனமில் லாதிருந்தார்
              அவர்பயமோ தம்மைப்பரி சேயரானோ ராலயத்துக் கப்புறஞ்செய் வாரென்பதை
             அவர்விருப்ப மோமனுட ராற்புகழே யலட்சியமே கர்த்தராலுண் டாமகிமை.

175.       என்னிடம்விசு வாசமுளோன் என்னிடமில் இங்கெனைய னுப்பினோரை விசுவசிப்போன்
              என்னையெவன் காண்கிறானோ அம்மனுடன் இங்கெனைய னுப்பினோரைக் காண்கிறானே
              என்னைவிசுவா சிப்பவனி ருட்டினுள்ளி ராதபடி யேயொளியா யிங்குற்றேன்
              என்வசனம் கேட்குமேவிசு வாசியாதோன் என்னாலே நியாயத்தீர்ப் பேயடையான்

176.       தீர்ப்பிடயான் வந்ததில்லை யிவ்வுலகை திட்டமாய தைரட்சிக்க வந்துளேனே
              தீர்ப்பிடுவ தொன்றுளதே திட்டமாயே யென்னையுமென் வாக்கையுமே தள்ளினோனை
              தீர்ப்பிடுமே யானுரைத்த தாம்வசனம் திட்டமாயே யம்மகனை யக்கடைநாள்
              தீர்ப்பிடயான் வந்ததில்லை யென்றறியும் ஆதலினாற் றோடுமுமின் ரட்சிப்பை

177.       என்சுயமா யொன்றையுமே பேசினதில் சொல்வதும் போதிப்பதுவு மின்னதௌ
              நன்னயமா யிங்கெனைய னுப்பியவென் நற்பிதாவெ னக்களித்த கட்டளையே
              நன்னயமா யிட்டஅவர் கட்டளைகள் நானறிவேன் நித்தியமாஞ் ஜீவனென
              நன்னயமா யானுரைக்கும் யாவுமவா சொல்வதேபோல் நானுரைக்கின் றேனென்றார்.