பக்கம் எண் :

280

 

168.       மண்ணிருந்தே யானுயர்த்தப் பட்டிருக்கும் பொழுதிதுவே மாட்சியாய்ந டக்குமன்றோ
              மன்னவரெல் லோரையுமே யென்னிடமே வகையொடுமி ழுத்தருள்வேன் என்றனரே
             இன்னவித மாமரணந் தம்மதென்றும் அம்மரணத் தாலுலகின் மானுடர்க்கே
              என்னவித நன்மையேயுண் டாமெனவும் உணர்த்தவுமே இதுசொன்னார் யேசுபரன்.

169.       என்றுமேயி ருப்பவரே மேசியாவே யென்றுவேதஞ் சாற்றுவதைக் கேட்டுளேமே
              இன்றுநீவிர் சொல்லுகிறீர் மனுமைந்தன் ஏற்றியுயர்த் தப்படவே வேண்டுமென
              நன்றிதோநீர் சொல்கிறதோ விந்தையே நாங்களிதை நம்புவதுங் கூடியதோ
              பொன்றுமிந்த மனுகுமார னாரெனவே நன்றுபுகல் வீரெமக்கே யென்றுரைக்க

170.       ஒளியிருக்குங் காலமோதான் மாசுருக்கம் ஒளியிலாவி ருட்டினில கப்படாதே
              ஒளியும்மோ டுள்ளபொழு தேநடப்பீர் ஒளியில்லா தேகடப்போன் நெறிகாணான்
              ஒளியிருக்கும் போதொளியின் பிள்ளைகளா யொளியினிடம் விசுவசமே வைத்திருமின்
              ஒளியானோ ரேயவர்கட் கிவைசொல்லி ஒதுங்கியேம றைந்தனரே யத்தருணம்.

141. யூதராற் புறக்கணிக்கப்படல்.யோ. 1 : 5, 9 - 11; 12 : 37 - 50.

171.       இருணிறைந்த இப்புவிபிர காசமுற இன்னுயிரா மொளியார்வந் தாருலகில்
              இருளோஅச் சீவஒளி பற்றவில்லை இவ்வுலகோ ஒளியையே யறிந்ததில்லை
              இருளகற்றி சீவனேகொ டுக்கவந்தார் இன்னொளியார் தமதுசொந்த மானதிலே
              இருள்மதியாற் றமதுசொந்த மாமொளியை யேற்காத கற்றினதே தான்கெடவே.

172.       அவர்களுக்கே யெத்தனையோ அற்புதங்கள் அன்பொடுமே செய்துதமைக் காட்டியுமே
              அவர்மனமோ கல்லேபோ லானதையோ விசுவசியா தேயிருந்தார் அன்பரையே
              எவர்விசு வாசித்தரோ ஆண்டவாஎம் மூலமாயே கேள்வியான தாமெதையும்
              எவர்க்கு வெளிப்பட்டது வோகர்த்தர் வல்லபுயம் என்றேசாயா சொல்லியபோல்