பக்கம் எண் :

திரு அவதாரம்279

 

163.       கேள்விகொளு முங்களுக்குச் சொல்வதையே கேட்பீரே சத்தியமே சத்யமிதே
              வீழ்ந்துமேநி லத்தினிற்சா காதிருந்தால் வீணாய்த்த னித்திருக்குங் கோதுமையே
              வீழ்ந்துமேநி லத்தினிலே செத்ததெனில் மிக்கபல னீய்ந்தருளும் மாநலமாய்
              ஆழ்ந்துகவ னிக்கிலவ மாகுமலோ தானெனசீ விப்பவனின் சீவியமே.

164.       எவனுமேதன் சீவனைநே சிப்பனெனில் சீவனையி ழந்துவிடு வான்முடிவில்
              எவனொருவ னிம்மையிலி ருக்கையில்தன் சீவனைவெ றுத்துமேசீ விப்பனெனில்
             அவன்தனது சீவனையே காத்தருள்வான் அந்தமிலா நித்யசீவ காலமாயே
              எவனுமேனக் கூழியஞ்செய் கின்றனனோ என்னையேபின் பற்றிவர என்றனரே

165.       என்னூழியன் நானெவணி ருக்கிறேனோ அங்குமேமெய் யாயிருப்பான் நிச்சயமே
              என்தந்தை யேகனஞ்செய் வார்நிசமே ஊழியமெ னெக்கவனுஞ் செய்வனெனில்
              என்னாவி கலங்குகிற திந்தவேளை யென்சொலுவே னிந்தவேளை நின்றெனையே
              என் தந்தாய் ரட்சியுமே யென்பேனோ வந்தனனிதற் கெனவிவ் வேளையினுள்.               

166.       மகிமைசெய் வீருமது நாமமேதான் மகிமையார் திருப்பிதாவே யென்றுரைக்க
              மகிமைசெய் தேனின்னும் செய்வேன்மகி மையெனும்வாக் கெழுந்ததுவே வானின்றே
              மகிமைமிகு மிச்சப்தங் கேட்கவுமே யிதையறிந்தே 'வானிடியின் சப்தமென்றார்
              "பகிரங்க மாயுரைத்தான் தூத"னெனப் பகர்ந்தனரே யங்குநின்ற வேறுசிலர்.

167.       இந்தவித மங்கிருந்தோர் பேசவுமே யேசுபரன் செப்பினரே யங்குளோர்க்கே
              இந்தவாக்கோ என்னிமித்த மானதில்லை உம்நிமித்த மேயிதுவுண் டாயினதுவே
              இந்தவுல கத்தினுக்கே யிச்சணமே யேற்றதொரு தீர்ப்புமேயுண் டாயினதே
              இந்தவுல காதிபனே யானவனும் இச்சணந்தள் ளப்படுகின் றான்புறம்பே.