பக்கம் எண் :

278

 

158.       உங்களுட வீடாமிப் பூநகரே யுங்களுக்கில் லாதுமேபோம் பாழுமேயாம்
              எங்கடவுள் நாமத்தி லேவருமோர் எம்மரசன் தோத்திரிக்கப் பட்டரென
              உங்களுட நாவினாலே சொல்லுவரை உங்கணாலே காணமாட்டீ ரென்னையன்றே
              அங்ஙனமப் பேச்சையே நிறுத்தியப்பால் அங்கிருந்தே நீங்கவேயா யத்தமானார்.

139. விதவையின் இரு காசு. மாற். 12 : 41 - 44; லூக் 21 : 1 - 4.

159.       காணிக்கை போடுமிடம் வந்தனரே காணிக்கைப் பெட்டியெதி ரேயமர்ந்தார்
              காணிக்கைப் பெட்டியுளே பற்பலபேர் காணிக்கைகள் போடுவதைப் பார்த்திருந்தார்
              காணிக்கை போட்டனரே ஐசுவரியர் காணமிக வேயதிகங் காசுகளே
              காணிக்கை போட்டனளே யோர்விதவை கட்டமொடே சேர்த்தஇரு காசுகளே

160.       கண்டனரே காணிக்கை போடுவதை சீடரைய ழைத்தவர்க்கே மாகனிவாய்
              விண்டனலே யிவ்வசனம் இவ்விதவை மற்றவர்க்கு மேலதிகம் போட்டனளே
              பண்டமேது மற்றவளே யேழையிவள் பண்பொடுமி ருந்தவெல்லாம் போட்டனளே
              பண்டநிறை ஐசுவரிய ராமிவர்தம் பரிபூரணத் தேயிருந்தே போட்டவரே.

140. கிரேக்கர் தரிசனம் பெறல். யோ. 12 : 20 - 36.

161.       பண்டிகைகொண் டாடவுமே வந்தவருள் பண்பொடிருந் தார்சிலகி ரேக்கருமே
              அண்டினர்கி ரேக்கரேபி லிப்புவையே பெத்சயிதா ஊரவனா மன்பனையே
              கண்டுகொள ஆசையுளேம் யேசுவையே காருணிய னுக்கறிவிப் பீறென்றனர்
              விண்டனனே யிதையந்தரே யாவினுக்கே விண்டனரே யேசுவிட மிவ்விருவர்.

162.       விரும்பினவர் யேசுவையே கண்டுகொண்டார் உள்ளமுமே பூர்த்தியுறக் கண்டனரே
              திருக்குருவைக் கண்டவர்ம கிழ்ந்தனரே திருவுரைகேட் டேகலியுந் தீர்ந்தனரே
              அருளுருவா னேயவர்க்க ருள்புரிந்தார் அருமையுள வார்த்தைகள் மொழிந்தனரே
              குருபரனே கூறியதாம் வாக்கையுமே கவனமொடு கூர்ந்துமேகேட் டாரவரே.