பக்கம் எண் :

திரு அவதாரம்277

 

153.       சென்றநாட்கொ டூரமேபி தாக்களொடே தீர்ந்துமேமு டிந்ததென்றெண் ணாதிருமின்
              இன்றுமேநீ ருங்களின்பி தாக்களையே யின்பொடுமே பின்பற்றுவீர் மாகொடிதாய்
              நன்றுறவே தர்சியரை ஞானியரை யனுப்புகிறேன் நல்லவேத பாரகரை
              நன்றிகெட்டோர் மாதுரோக முள்ளவரே நல்மனதோ டேற்பதுமுன் டோஅவரை.

154.       சிலரையோநீர் சொல்லுவீர்சி னந்தெழுந்தே நீசமாங்குரு சேற்றியுமே கொல்லுவீரே
              சிலரையோநீர் வாரினாலே யேயடிப்பீர் சீறியேசெ பாலயங்க ளெங்கெவணும்
              சிலரையோநீர் துன்புறுத்திச் சீறியுமே சீயென்றேது ரத்துவீரே யூரூராய்
              பலருடரத் தப்பழிக்கா ளாம்படிக்கே பாடுபடச் செய்குவீரென் னூழியரை.

155.        பத்தனான நீதிமானா பேலெனுமோர் பாக்கியனின் சிந்துண்டதாம்ரத்தமுதல்
              அத்தனுட ஆலயமும் பீடமுமா மிவ்விரண்டின் மத்தியில்நீர்சிந்தியதாம்
             சித்தனான பரகியாவின் மைந்தனான சீர்சகரி யாவினது ரத்தம் வரை
             எத்தனையோ சிந்தியரத் தப்பழிகள் யாவுமேயும் மேல்வரச்செய் வீரிவையே.

156.       மெய்மெயாயே யானுமக்குச் சொல்லுகிறேன் நீங்காதே வந்துறுமிவ் வாக்கினைகள்
              பொய்யாகும் மாயத்தைச் செய்பவராம் பொய்யரான மரய்மாலக் காரரின்மேல்
              மெய்யாகும் வேதவாக்கை யேபுரட்டி யுள்ளமும்பு றம்புமேவே றானவரை
              பொய்யாத கந்தையரா மிக்கொடியோர் பொன்றியேபோம் வண்ணமாயே வந்தறுமே.

157.       எருசலேமே பாதகவெ ருசலேமே யெத்தினமுந் தீர்க்கரையே கொல்பவளே
              எருசலேமே யுன்தனிடம் யானனுப்பு மூழியரைக் கல்லெறிந்து கொல்பவளே
              எருசலேமே யுன்மகரைச் சேர்த்தணைக்க எவ்வளவோ அவாவுற்றேன் கோழியேபோல்
              எருசலேமின் மக்களான நீவீரோ என்னிடமே சேரமன மற்றீரே.