பக்கம் எண் :

276

 

148.       பார்க்கவேப கட்டெனந டிப்பவராஞ் சாதுசேயர் பரிசயரா மாயரேநீர்
              பார்க்கவேது லக்குவீர்பிர காசமாயே பாத்திரவெ ளிப்புறத்தை யேபிறரே
              பார்க்காத வுட்புறமோ மாவசுத்தம் கொள்ளைபாழ் நீசமாய்நி றைந்துளதே
              பார்க்கவேயே லாக்குருடாம் பாரிசயனே பார்வையே யடையவேவிருப் பமின்மையால்.

149.       அறிந்துகொள்வாய் பாத்திரவெ ளிப்புறமோ அல்லவெனி லுட்புறமோ முக்யமேதோ
              அறிந்திதைவெ ளிப்புறஞ்சுத் தம்பெறவே யுட்புறத்தை முன்னதாய்ச்சுத் தஞ்செயுவாய்
              தெரிகிறதே யும்மகத்வம் பிரத்தியட்சம் தீமைநிறை பாரகரே பரிசயரே
              தெரிகிறதே யுங்களலங் காரமோதான் தீட்டுநிறை கல்லறைவெ ளிப்புறமே.

150.       சிறப்புளதே கல்லறைவெ ளிப்புறமே தீட்டியதோர் வெள்ளையின்வி சேடத்தால்
              சிறந்தவரின் என்புகழும் ரோமமெலாம் இன்னுமேய சுத்தமேதா னுட்புறத்தில்
              சிறப்பொடுமே தோன்றுகிறீர் வெளியழகாய் நீதிமான்க ளென்றுசீராய் மானுடர்க்கே
              திறந்துமது உள்ளத்தை நோக்கஅவண் மாதிரளே யக்கிரமு மாயமுமே.

151.       ஐயோபரி சேயர்களே பாரகரே ஐயோமாய் மாலரான உங்களுக்கே
              செய்குவீரே கல்லறைகள் சீர்சிறப்பாய் சீரியரே தர்சியரா மும்முனோர்க்கே
              மெய்யிதுவே நேர்த்தியாய லங்கரிப்பீர் மேன்மைநீ திமான்களின்ச மாதிகளை
              ஐயோபி தாக்களின்நாள் யாமிருந்தால் அன்னவர்ப ழிக்குடன்ப டோமென்கிறீர்.

152.       சாட்சிகளே யுங்களுக்கு நீங்களேதான் தர்சியரைக் கொன்றவரின் மக்களென
              சாட்சியாயுந் தந்தைகளி னக்கிரம அளவுசரி யாகவில்லை நீர்நிரப்பும்
              சூழ்ச்சியுறு சர்ப்பங்களே துர்விரியன் விடமுளவாங் குட்டிகளே தீநரகின்
              காட்சியையும் மாகொடிய ஆக்கினையும் கடந்துமேநீர் தப்புவதுங் கூடியதோ.