பக்கம் எண் :

318

 

4.          இந்நாள் தாவீ தின்மைந் தாவெனும் நாமங் கொண்டோய்
              உன்னதர் தந்தை சித்தம் உறுதியாய் முடித்தற் காயோ
              உன்னுட ஆத்மந் தன்னில் ஒப்பிலா வேதை யோடே
              இன்னலே கொள்தற் காக இன்னதி தாண்டி னாயோ.

5.           அந்நாள் தனிலவ் வேந்தே யளவிலா வேதை யோடே
              பின்னாற் சனமே யேக பெருந்துய ருற்றோ றாயே
              முன்னால் நடந்தே யன்னோன் தன்முகம் மூடி யேதான்
              தன்னடி ரட்சை யின்றே தயங்கியே சென்றா னன்றோ.

6.           இந்நாள் சேசென் வேந்தா எதிரெதும் வந்தா லுந்தான்
              பின்னிடை யாதே யஃதை பெருமித மாயே யேற்றே
              இன்னலோ ஏதென் றாலும் இறக்கவுந் துணிந்தா யன்றோ
              மன்னவா மன்னர் மன்னா மனுடரி லன்பே கூர்ந்தே.

7.           முன்னாள் முன்மா தேவை முறணியே கனியே தின்றே
              அந்நாள் ஆண்டார் தாமே யமைத்ததோர் விதியே மீறி
              சின்னா பின்னஞ் செய்தே சிதறியே யிடறிப் பின்னும்
              இந்நா ளிலுமைந் தர்க்கே யிழைத்தனள் கொடுமா தீங்கே.

8.           இந்நாள் மனிசியின் வித்தாம் இணையிலா அன்பின் வேந்தா
              இந்நீள் லோகத் துள்ளோர் எவையின் மக்கள் தாமே
              பன்னா ளேயு ழன்றே படும்பவத் தீங்கே நீக்க
              இன்னா வடைதற் கென்றோ ஏகுகின் றாய்வி ரைந்தே.

9.           முன்முதல் மாந்தன் தானே முதற்பிர மரணம் மீறி
              வன்னம் லர்க்கா தன்னில் வழுவியே வீழ்ந்தே யல்லால்
              பின்வரு வோர்மைந் தர்க்கே பெருந்துய ரின்னா வெல்லாம்
              இன்னுமே சாவுந் தானே எளிதினிற் சேர்த்தே வைத்தான்.

10.        இந்நாள் யேசு நாதா இரண்டா மாதாம் பேரர்
              மன்னா நின்சா வாலே மரணவெங் கூரோ டித்தே
              மண்ணாம் லோகிற் றானே மரணத் தாலுண் டாகும்.
              இன்னா வைநீக் கற்கோ எழுகிறாய் காவை நோக்கி.