பக்கம் எண் :

திரு அவதாரம்319

 

11.         சீர்மிகு மேதேன் காவில் மீறவே செய்பா வத்தால்
              சீர்மகர் கெட்டே போகச் செய்தவல் சர்ப்பத் தோடே
              பேர்பெறுங் கெத்சே மேனே பேர்குரு சினிலுந் தானே
              போர்பொரு தேமேற் கொள்ளப் போகிறா யோவேந் தாநீ.

12.        மனதினால் வார்த்தை யாலே வளர்சரீ ரத்தா லுந்தன்
              மனதுமே புண்ணாய் நோக கொடியமா பாவஞ் செய்தே
              எனதுட சீவன் மாய இழிகதி யுற்றே னுக்காய்
              உனதுட சீவன் தந்தே யுயர்த்தவே போகின் றாயோ.

13.        உன்னதக் கடவுள் மைந்தா ஒப்பிலா அன்பின் வேந்தா
              உன்தனின் ஐக்யம் போக்கி யுனது சமுகம் நீங்கி
              அன்னபேர் வாதை யேயாம் அழல்நர குய்யா வண்ணம்
              என்தனின் பவமே யெல்லாம் இறக்கினே னுன்தன் பாதம்.

14.        கீதரோன் ஆறே தாண்டிக் கெழுமலர்க் காவே யாகும்
              சீதள கெத்செ மேனே சிசியரோ டேசேர்ந் தாரே
              சூதுநி றைந்தோன் தீயோன் தூயரை வீழச் செய்தோன்
              சாதனை கொண்டோன் சாத்தான் காத்திருந் தானே யங்கே.

15.         பாவஉற் பத்தித் தானம் பாவமே யூறும் ஊற்றே
              பாவவி டத்தா லந்தோ பார்கெடச் செய்தோன் சாத்தான்
              பாவமே தீர்ப்பான் வந்த பாவமில் லானைக் கிட்டி
              பாவஅ சுத்தங் காட்டி மாபல மாய்ச்சோ தித்தான்.

16.        பாவமே விரும்பா தொர்நீர் பாவமே யண்டா மாந்தா
              பாவமே யில்லா மைந்தா பாருட கொடும்பா ரந்தான்
              பாவமாங் குன்றும் மேலே பாழ்சுமை யாதற் காயே
              காவினிற் காத்தே நிற்கத் காவுளேன் செல்கின் றீரோ.

17.        பாவமா அருவ ருப்பே பாவமென் னிடமோ இல்லை
              பாவமா கொடுமை யாலே பார்படுந் தீதே நீக்க
              பாவமே சுமந்தே தீர்க்க பாவந்தீர் பலியே யாகி
              பாவமே யொழித்தல் நீக்கி பாரினில் வழிவே றுண்டோ?