பக்கம் எண் :

352

 

218.       "எலியாவைக் கூப்பிடுகின் றானுதவ" என்றருகே நின்றசிலர் கூவினரே
              பலியதுமு டிந்ததுவே தீர்ந்ததெனப் பார்த்தவருஞ் சீர்மறையின் வாக்குமேதான்
              பலிதமாகத் "தாகமானேன்" என்றுரைக்கப் பக்கமேநின் றோனொருவன் காடியிலே
              மெலியகடற் பஞ்சைத்தோய்த் தேபருக நீட்டினனே கோலொன்றிற் மாட்டியதை.

219.       பொறுத்திருபார்ப் போமெனச்சொன் னார்சிலர்பேர் புல்லியரே செய்துப காசமுமே
              வருகிறானோ எலியாவே யித்தருணம் வந்துகுரு சேயிருந்தி றக்கவுமே
              பருகினாரே காடியையே யட்டியின்றி பார்த்தனரே யாவுமேமு டிந்ததென்ன
              பெருங்குரலாயக் கூவினார் "மு டிந்த"தென போரினிலே பேர் ஜெயமே பெற்றவரே.

220.       எடுக்கவுமே கூடியதோ யாவனாலும் ஈசனான நித்தியரின் ஜுவனையே
              கொடுக்கவுமே டுக்கவுமே தம்முயிரை குன்றாவா திக்கமேதாம் பெற்றவரே
              "கொடுக்கிறேன்பி தாவேயென் னாவியையும் கைகளி"லென் றேயுரத்த சப்தமாயே
              விடுத்தனரே தம்முயிரைத் தஞ்சுயமாய் விடுத்துசிரஞ் சாய்த்தனரே நித்தியரே.

221.       ஆறுமணி நேரத்திற் குள்ளவரி னாவியேபி ரிந்ததுமோ ராச்சரியம்
              பாருமவர் ஆவியையே விட்டவுடன் பாரிலேநி கழ்ந்தனவே யற்புதங்கள்
              மாறுதலில் லாதவனுந் தன்னொளிம றைத்துமேபூ லோகிருனச் செய்தனனே
              பாரிடிந்தே கல்லறைதி றக்கவுமே பார்நடுங்கிற் றாலயத்து ரைகிழிந்தே.

222.       பூதலமேல் மாகொடுங்கு ரூசினிலே யுண்ணியன்தம் மாவிபிரித் தேமரிக்க
              ஆதவன்ம றைத்தொளியு டுக்களொடே அந்தரவா காயத்தி ருண்டதேனோ
              பாதகர்செய் பாதகங்கொ டுங்கிரியை பார்த்துமனம் நொந்தவனே வெட்கினன்போல்
              பாதலமுஞ் செல்கிரண மாயிரமும் பாரின்மேற் செல்லவிடா தேமறைத்தான்.