212. நன்றியற் றோரிவரே நாளின்று மப்படியே நன்றியற் றோரிவர்க்காய்த் துன்புறுதல் - நன்றன்றே நன்றியற் றோரிவரை நன்றியோ ராக்குதற்கே நன்றியற்று கின்றேனே நான். 213. பாவம்வெ றுப்பிலையோ பாவம்பொ ருந்துமோநீர் பாவமுஞ் சாபமு மானீரே - பாவம் பாவப்ப லியாகப் பாவஞ்சா பம்மானேன் பாவந்தொ லைப்பதற்கே பார். 214. பிதாவைப்பி ரியாதே பேணியி ருந்தீரே பிதாவின்மு கம்மறையப் பின்பென்ன - பிதற்றுவீர் பேரன்போ மாறாதே பேர்மல்மு டிந்தவுடன் மாறித்தெ ரிந்துவிடு மால். 215. அக்காலை யாதாமை யாட்டிவைத் தாயலவோ இக்காலை யாகாதுன் வஞ்சந்தான் - இக்காலை அப்பாற்போ சாத்தானே யார்ப்பா டஞ்செய்யாதே இப்பாலு னக்கொன்று மில். 216. விமலனையே வெல்லுவேன் என்றானே சாத்தான் அமலனோ வென்றவனை யார்த்தார் - சமலன் பதறியே யோடியே பாய்ந்தானே சாத்தான் பதரென்ன வேபறந்தப் பால். பாடுகள் முடிவு. வேறு 217. ஒன்பதெனு மூன்றுமணி யாகவுமே உவமையிலாச்சத்துருவை வென்றவரே தன்னுடைய பாடுசோத னைமுடியுஞ் சமையமேநெ ருங்குவதை யேயறிந்தே தன்பிதாவை நோக்கி "ஏலி ஏலிலாமா சபக்தானி" யென்றுரத்துக் கூவினரே என்கடவு ளென்கடவு ளேயெனையேன் கைவிட்டீர் என்பதாம தன்பொருளே. |