207. திருவுருவான் கொற்றவனைச் சோதித்தனர் தீயவரோ சிநேகிதரோ காலமெல்லாம் உருக்கமிகுஞ் சோதனையே பேதுருவால் உமக்கிதாகா பாடுகளே மேசியாநீர் திருக்குளதாஞ் சோதனையே சத்துருவால் திருமகனா ரென்றுணர்த்து வீர்குறுக்காய் குரூரமிகுஞ் சோதனையே மூர்க்கரினால் குருசினின்றி றங்குவாயி றங்குவாயே. 208. நேர்நின்றே சோதித்தனன் தீயனாவன் நெடுஞ்சிநேகர் சோதரராற் சோதித்தனன் பார்மூப்ப ராரியராற் சோதித்தனன் பதற்நெஞ்ச னாதிபனாற் சோதித்தான் போர்வீரர் பொதுஜனத்தாற் பொய்யராலே யிழிமூடர் மூர்க்கராலுஞ் சோதித்தான் நேர்குருசின் மேலிப்போ தொங்குகின்ற நிமலனோடு வஞ்சகப்போர் செய்கிறானே. 209. அம்மைவலப் பாகனான மாசிலனே யம்பரர்கோன் அண்டமெலா மாட்டுவோனே மெய்மையுறு அன்புருவான் தெய்வசுதன் மெய்யவதா ரப்புருடன் மேன்மையுளோன் இம்மையுறு மக்கள்முது சர்ப்பத்தா லிழந்தசிறை நீக்கவேதா மேற்றதொரு வன்மையுறு வெங்குருசில் சர்ப்பத்தின் வஞ்சகப்போர் வென்றதொரு மாட்சிகேண்மின். வேறு 210. ஈதெல்லாம் நேர்வதுண்டோ என்வார்த்தை கேட்பீரேல் வாதைபரி காசமுமோ வன்கொலையோ - ஏதுமக்கே ஈதெல்லா முத்தரிக்க இங்குற்றோம் சாத்தானே காதகரைக் காப்பதற் காய். 211. இறங்குவீர் தெய்வசுதன் என்பா ரிவரே இறங்கினா லிஸ்ரவேல் ராஜா - இறங்கினால் உன்னோக்க மாகும் உலகமோ பாழாகும் என்னோக்க முஞ்சிதறி யே. |