திருத்தாய் - அன்பார் சீடன். 203. உறுவுமும திதயமொரு வாளெனவே உத்தமனாஞ்சைமனேமுன் சொன்னதேபோல் இருதயமும் நொறுங்கினரா யின்னலுற கன்னமிரு பக்கமுங்கண் ணீர்பெருக திருஅனையு மவரதுச கோதரியாஞ் சீர்கிலேயோப் பாமரியம் மாளொடுமே அருளடைந்த மக்தலேனா மேரியுமே யங்கமர்ந்தே குரூசருகே நின்றனரே. 204. கண்டனரே தெய்வசுதன் ஜேசுபரன் கனிவுறுதா யன்புளனாஞ் சீடனையும் கண்டனரே தாயருகே நிற்கஅவன் கனிந்துமேத யங்குநின்ற தாயிடமே விண்டனரே தோவுமது மைந்தனென அவனையும்வி ளித்துனது தாயென்றனர் கண்டவரைச் சீடனேயந் நேரமுதற் கரிசனையாய்ச் சேர்த்தனனே தன்னகத்தே. 205. வன்கொலைஞர்க் காய்ப்பரனை வேண்டினரே தந்துவரம் வேண்டினோனாங் கள்ளனுக்கே தன்மதிப்பின் தாயருக்கா தாரமீய்ந்தே தாயளித்தே நேசனான சீடனுக்கே துன்பமார்பூ லோகவுற வந்தமுற துர்ருலகோர் பேரிலன்பே மாய்ந்துபோமே துன்பமெனுந் தீச்சுடரெ ழும்பியுமே சூழ்ந்துமேத கித்ததுவே மும்மணியாய். மூன்று மணி நேரம். 206. மூன்றாம ணிச்சமையம் மூர்க்கருமேமுன்னவனைக் குருசினிலே யேற்றினரே மூன்றுமணி நேரமாக முன்னவனை யாவிமனந் தேகமும்வ தைத்தனரே மூன்றுமணி யாகவுமே காரிருளே மூடவுமே பேச்சிழந்தார் மூர்க்கருமே மூன்றுமணி நேரந்தான் முன்னவனும் முதுசர்ப்பத் சத்துரொடே போர்முனைந்தார். |