பக்கம் எண் :

354

 

228.       திருமகன்தஞ் சடலமாகு மென்திரையைச் சிலுவையிற்கி ழித்துயிரை நீக்கிவிட
              திருச்சமுக வழிமறித்தே தொங்கியதா திரையேரண் டேபிரிவா யிற்றதென்னோ
              திருமகனி னருளடைந்த பாவியர்தாந் திருத்தூதர் தாம்பணியும் திருச்சமுகம்
              திருமுகமொடு தயிரியமாய்ச் சேர்வதற்காய்த் திடமொடுமே நின்றதடை போனதென்றே.

229.       இக்காட்சி யற்புதங்கள் கண்டவனாம் இனம்ரோமன் நூறுவருக் காதிபனும்
              இக்காட்சி கண்டவராஞ் சேவகரும் "நீதிபரன் தெய்வமைந்தன்" என்றனரே
              இக்காட்சி கண்டவராந் தம்ஜனமோ இவர்தம்மே சையாவென் றேயறியார்
              இக்காட்சி சிந்தனைசெய பாவியரே இப்பொழுது படர்ந்தனரே தம்மார்பி லேயடித்தே.

230.       பார்த்துமேநின் றோர்பலபேர் துன்படைந்தே படர்ந்தனரே தம்மார்பி லேயடித்தே
              காத்தருகே நின்றகலி லேயரானோர் கவலொடுமே நின்றழுத மாதருமே
              மூர்த்தியிவர்க் கேநிகழ்வ யாவையுமே முழுவதுமே பார்க்கமனங் கொண்டவராய்
              காத்தவணே நின்றனரே கல்லறையுள் ளவரொடுமே செல்லமன முள்ளவர்போல்.

169. அந்தரங்க சீடர். அடக்கம்.
மத். 27 : 57 - 66; மாற். 15 : 42 - 57; லூக். 23 : 50 - 56; யோ. 19 :
31-42.

231.       வெளியரங்க சீடரோடிப் போயினரே நிர்மலனை யேபிடிக்க ஈர்வலல்லால்
              வெளியரங்க மாகவந்தார் வேறிருவர் வீரரேபோ லந்தரங்க சீடரிவர்
              ஒளியானோர் ஜேசுபரன் ஜுவன்விட ஓர்சிஷிய னோடினான்பி லாத்திடமே
              பொழிவோடும் போயினனே மற்றவனோ போய்மாஞ்சு கந்தவர்க்கம் வாங்கவுமே.

232.       அரிமத்யா வெனும்பதியான் கண்ணியவா லோசனைச்சங் கத்தினன்யோ செப்பென்போன்
              பரிவொடுமே கடவுளது ராஜியமே வருவதற்காய்ப் பண்பொடுமே காத்திருந்தோன்
              பெரியதொரு தனமுளோனே புண்ணியவான் பிலாத்திடம னூமதியே கேட்கவேதான்
              பரன்குருவின் சடலத்தைத் தன்னிடமாய்த் தந்தருள மாபரிவாய் வேண்டினனே.