29. மரியாள் மகதலீன் சேர்ந்தனளே மற்றவர் மாதருஞ் சேர்ந்தனரே தெரிவை யனைவரு மேமகிழ்வாய்ச் சேர்ந்தனர் சீடரி டத்தினிலே தரிசனந் தமக்கவர் தந்ததையும் தம்மிடஞ் சொன்னதாஞ் செய்தியையும் அறியவே சிஷியருக் குரைத்தனரே யன்னவ ரோஅதை நம்பவில்லை. 175. காவற் சேவகரின் பொய்ப்பிரஸ்தாபம். மத். 28 : 11 - 25. 30. கடிதினில் வந்தனர் காவற் சேவகர் துடியொடும் மாதரே தொல்நகர் சேர்முனே நொடியினி லர்ச்சகர் மூப்பரைக் கண்டனர் நெடிதுமே சாற்றினர் நேர்ந்தவை யாவுமே. 31. கொடியரா மர்ச்சகர் கூட்டினர் மூப்பரை இடிவுறு மனத்தினர் எண்ணினர் என்செய கடிதினிற் கரப்பதே காரிய மாமென நொடியினில் முடித்தனர் நுண்ணறி வுள்ளவர் 32. வஞ்சக மனத்தினர் வகையென வென்றென் லஞ்சமே நலமென லகுவினிற் றீர்த்தனர் நஞ்சக முளரே நவின்றன ரிப்படி கொஞ்சம் பொருள்தரும் இதுவிதங் கூறுவீர். 33. கடினமாம் விழிப்பொடு காவலே காத்தனம் நொடிப்பொழு தயர்ந்தனம் நுண்துயில் கொண்டனம் கொடியஅவ் விரவினில் கூடியச் சீடரே கடிதினிற் சடலமே களவெடுத் தார்என. 34. அதிபதி யிதனையே யறிந்துகொள் வாரெனில் மதியொடு முரைத்தே மனிக்கவே செய்குவோம் சதிமிக இதுவிதம் அவர்க்கிவை சாற்றியே நிதிமிக வளித்தனர் அவர்களும் நீங்கினர். 35. லஞ்சமே பெற்றவர் லஜ்ஜையிற் சேவகர் நஞ்சக முற்றவர் நவின்றஅச் சொற்படி கொஞ்சமும் வெட்கினர் எவர்க்குமே கூறினர் வஞ்சகச் சொல்லிதே வளர்ந்ததே யெங்கணும். |