பக்கம் எண் :

362

 

23.        மரித்துயிர்த் தெழுந்தவர் கேட்டனரே மனுஷியே யழுகிற காரணமென்
              பரிவொடு தேடுவ தெவரையோநீ பண்பொடு பகர்வாய் என்றனரே
              மரியணங் கறிந்தில ளேயினுமே யெண்ணின ளதுவனக் காரனென
              அறிவியு மெனக்குநீர் வைத்தவிடம் அவரையே யெடுத்தெவண் வைத்திருந்தால்

24.        தெரிவியு மவரையே வைத்தவிடம் அவணடைந் தெடுப்பேன் யானவரை
              மரியை யேயரு ளொடுநோக்கி "மரியா ளே" யென விளித்தனரே
              அறிந்தனன் திரும்பியே பார்த்தவரை யழைத்தன ளவரையே "ரபூனி" யென
              பரிவொடு மவர்திருப் பாதமலர் தழுவியே தொழவே பணிந்தனளே.

25.        மன்னுமா கிறிஸ்துவோ தடுத்தவளை "மரியா ளே" தொடா தெனைநீயே
              இன்னுமே யெனதுட தந்தையிடம் ஏறிப் போகவே யில்லை" யென்றே
              பின்னுமே யுரைத்தார் ஜேசுபரன் பிறிதொரு செய்தியே சிஷியருக்கே
              என்சகோ தரரிடஞ் செல்லுவாயே யறிவியிச் செய்தியே யவர்களுக்கே.

26.        எனதுட தந்தை யரானவரே யின்னுமுந் தந்தை யரானவரே
              எனதுட தெய்வமே யானவரே யின்னுமுந் தெய்வமே யானவரே
              எனதுட தெய்வமென் தந்தையிடம் ஏறியான் செல்கிறேன் சீக்கிரமாயே
              எனதுட செய்தியே யிதையவர்க்கே யேகியே சொல்வாய் என்றனரே.

174. மற்ற மாதருக்குக் காட்சி. மத். 28 : 9, 10.

27.        மரியணங் கினுக்கிது காட்சியையே மாவுவப் பொடுமவ ரளித்ததன்பின்
              துரிதமாய்ச் செலுமறு மாதருக்கும் தோன்றின ரவர்செலும் வழியினிலே
              பரிவொடு முரைத்தே "வாழ்க" வென பண்பொடு மவர்களை வாழ்த்தினரே
              பரிவொடு தழுவியே யவர்பதங்கள் தெண்டனிட் டவரையே பணிந்தனரே.

28.        காவல னவர்களைத் தேற்றினரே "கலங்கியஞ் சாதிரும்" என்றுரைத்தே
              ஆவலாய்ச் செலுமின் சீக்கிரமாய் எனதுச கோதர ரன்பரானோர்
              மேவியே கலிலியா நாட்டினுக்கே விரைந்துமே செல்லவே சொல்லுவீரே
              ஆவலா யவரே செல்லுவரே யவணெனைக் காண்பார் என்றனரே.