பக்கம் எண் :

திரு அவதாரம்361

 

16.        நடுக்கமுந் திகிலும் டைந்தவராய் ஞானமுள் ளவராம் மாதரிவர்
              திடுக்குறு மனமொடு திரும்பினரே தீவிர மொடுவெளி வந்தனரே
              நடுக்கமே யிருந்தும் மனதினிலே மாநல மகிழ்வே பொங்கியதே
              துடுக்காய் நடந்தார் துரிதமாயே யோடின ரிதுசொல சீடருக்கே.

17.        நாடிவந் தனரே பேதுருவும் நலமொடும் யோவான் மக்தலீனும்
              ஓடிவந் தனரே மாவிரைவாய் ஒருமுக மாகவே கல்லறைக்கே
              ஓடிவந் தருளன் யாவருக்கும் முன்னதாய் வந்தே சேர்ந்தனனே
              நாடிவந் தவனாம் பேதுருவோ முதுமையாற் பிந்தியே வந்தனனே.

18.        உந்திமுன் னாகவந் தானெனினும் உட்செல விலையே யவ்வருளன்
              அந்தவி டங்குனிந் துண்ணோக்கிக் கண்டன னவணுளே துணிகிடக்க
              வந்தவன் பிந்தியவன் கல்லறையுட் சென்றுகண் டனன்வகை யாயவனே
              அந்தமாய்ச் சீலைகள் வைத்திருக சுற்றிய தலைத்துணி யவண்தனியாய்

19.        முந்திவந் தவனா மற்றவனோ முன்னவ னருளே பெற்றவனே
              பிந்திவந் தவனாம் பேதுருவின் பின்னுழைத் தனனே கல்லறையுள்
              சிந்தனை செய்தன னுள்ளநிலை தீர்க்கவிஸ் வாசமே கொண்டனனே
              முந்தியே சொன்னதாம் வாக்கறியார் முன்னவ னுயிர்த்தெழு வாரெனவே.

20.        இருவரும் வெளியே வந்தனரே இறைவனோ அவணுளில் லாததீனால்
              திரும்பினர் மிகவாச் சரியமொடே யுளத்தினிற் சிந்தனை செய்தவரே
              அருகுநின் றனள்மக தலீன் மரியாள் அகன்றுசெல் வதற்கே மனமிலாதே
              அருமையாங் குறுஅவ ணில்லையதால் அழுதுகொண் டவண்மிக விசனமொடே.

173. மகதலீன் மரியாளுக்குக் காட்சி. மாற். 16 : 9; யோ. 20 : 11 - 18.

21.        அழுதுகொண் டவன்குனிந் தாளவணே ஆவலாய்க் கவலையாய்க் கல்லறையை
              தொழுகைக் குரியார் படுத்தவிடம் தூகரா மிருவரைப் பார்த்தனளே
              வெளுப்புடை யணிந்தவ ரிருதூதர் வீற்றிருந் தனர்தலைப் பதைபக்கம்
              "அழுகிற தேனென வுரை" யெனவே யன்பொடு வினவின ரிருவருமே

22.        எவரோ எனதுட ஆண்டவரை யெடுத்தெவ ணகன்றார் ரகசியமாய்
              அவரை வைத்துள இடமோ யறிந்திலேன் எனவுரைத் தனள்மரியாள்
              இவற்றையே பகர்ந்துபின் திரும்பவுமே யியேசுநிற் கிறதைக் கண்டனளே
              அவரையோ அருட்பர னியேசுவென அறியா திருந்தன ளத்தருணம்.