பக்கம் எண் :

360

 

9.           தெரிவைய ரானரை நோக்கியவன் செப்பின னுாறுதல் பயப்படாதீர்
              அறிந்துளே னிதுதலந் தேடுகின்றீர் குருசில றையுண்ட ஜேசுவையே
              அறிந்துகொள் வீரவ ரிங்கிலையே தமதுரைப் படியவ ரெழுந்தனரே
              பரிவொடு நெருங்கியே பாருமிவண் அவரை வைத்ததா மிடமிதுவே.

10.        தூதனோ இவ்விதஞ் சொல்லியபின் புதியகல் லறையுட் புகுந்தனனே
              ஆதரங் கொண்டஅப் பூவையரே யணுகியே யறிந்தனர் இல்லையென
              மாதரே கல்லறையுட் செலும்போ தகன்றனள் மகதலீன் மரியாளோ
              பேதுரு ஜானெனுஞ் சீடருக்கும் பிறர்க்குமே யுரைக்கவே யோடினளே.

11.        ஓடினள் மகதலீன் உத்தமியே சிஷியரா மிருவரைப் பார்த்தனளே
              நாடியே கல்லறைக் கேகினேமே நமதருட் பரனையோ கண்டதில்லை
              நாடியே யெவனோ கள்ளமாயே நகர்த்திவிட் டனன்நம் ஜேசுவையே
              தேடியுங் கண்டிலே மென்றுரைத்தே திரும்பினள் விரைந்துமே சீடரொடெ.

12.        உள்ளே சென்றவத் தெரிவையரே உடலையோ அவணுட் காணவில்லை
              உள்ளே கண்டன ரிருபுருடர் ஒளியுடை யணிந்திருந் தாரவரே
              கள்ளமே யறியா மனதுளேரே கலங்கியே பயந்தே தலைகுனிந்தார்
              வெள்ளுடை யணிந்தவ ரிருவருமே விளம்பினர் "கலங்கா தீ"ரெனமே

13.        அறிந்துளேம் நீவிர் தேடுகின்றீர் சிலுவையி லறைந்துள நசரயனை
              அறிந்திலீ ரோஅவர் ஜுவனுளோர் அவர்மரித் தவரிட மிருப்பதில்லை.
              அறிந்திலீ ரவரைத் தேடுகின்றீர் அவருயிர்த் தெழுந்தே யகன்றனரே.
              தெரிந்துகொள் வீரவர் வார்த்தை யவருட சொலையும் விசுவசிப்பீர்.

14.        மனுமகன் பவியராம் மனுடரிடம் கொடுபடு வரேமிக வஞ்சகமாய்
              சினந்துமே யவரையே சிலுவையிலே யறைவரே கொடுவதை செய்குவரே
              தினமாந் திரிதினம் மரணவென்றே சிறப்பொடு முயிர்த்தெழு வாரவரே
              இனமொடு நிறைவுற லவசியமென் றவர்முனே யிசைத்ததை நீரறிவீர்.

15.        செல்லுவீர் துரிதமா யிவணிருந்தே பேதுரு விடம்பிற சீடரிடம்
              சொல்லுவீ ரவர்க்கெலாம் மரணவென்றே ஜோதியா யுயிர்த்தெழுந் தாரெனவே
              செல்லுகின் றாரவ ருமக்குமுன்னே செப்பிய படிகலி லீநாடே
              சொல்லிய படிதரி சனம்பெறுவீர் தூயரைக் கலிலெயா நாட்டினிலே.