3. எங்கோன் பரம்பொருள் நித்தியரே யெழில்மிகு உன்னத ராமெகோவா உங்கோல் செலுமிட மெங்கெவணும் உமதுயர் மாட்சிமை யோங்கமிக எங்குமே யுமதுட நாமமுமே எழில்பரி சுத்தமே யாகவுமே எங்களின் சத்துரு அரசிழந்தே உமதெழில் ராஜ்ஜிய மோங்கமிக. 4. எங்குமே முமதுட திருமகனார் சென்றுமே ஜெனித்தனர் புவியினிலே துங்கனா மனுமகன் ஜேசுபரன் துர்மனப் பேயொடு பொருதனரே பங்கமே செய்தன ரலகையையே பாரினிற் ஜெயித்தார் சிலுவையிலே மங்கா மகிமையோ டெழுந்தனரே மாரண மிருந்தே யிதுதினமே. 5. எல்லையில் வல்லவர் ஜேசுபரன் இழிந்தவோர் சிறையினில் விழுந்தவரை தொல்லையே கொண்டதுர்ப் பாக்கியரை விடுத்தன ரெனத்துதித் தார்த்தனரே எல்லையில் லாதம கிழ்ச்சியொடே யெழுந்தவர் நடித்தே பாடினரே எல்லையில் லின்பமார் செய்தியிதை யெளியரு மறியவி ரும்பினரே. 172. கல்லறைச் சம்பவம். மத். 28 : 2 - 8; மாற். 16 : 4 - 8; லூக். 24 : 2 - 9; யோ. 20 : 1 - 4. 6. கல்லறை மூடுகல் லிலகவில்லை முத்திரை கலையவு மிலையதன்மெல் கல்லறை காத்தவர் விலகவில்லை காவலர் விழிப்புமோ தளரவில்லை கல்லறை நிச்சய மேவெறுமை காவல னெழுந்தனர் நிசநிசமே தொல்லுல கோருமே யிதையறிய ககனமே தோன்றின னொருதூதன். 7. விண்ணினி லெழுகிற அதவன்போல் விண்ணினி லெழுந்தனன் ஜோதியென விண்ணினி லுருவுமோர் மின்னலேபோல் விண்ணினின் றிறங்கினன் மண்ணிதன்மேல் விண்மினை நிகர்த்தவோர் மேனியுளொன் வெண்ணுறை மழைநிற வாடையுளோன் கண்ணையே பறிக்குமோர் காந்தியொடே கல்லறை சேர்ந்தனன் கணத்தினிலே. 8. பூவுல கேயதிர்ந் தேநடுங்க பூவையர் மனமுங் கலங்கியதே காவலர் தைரிய மேயிழந்தார் பிணம்நிகரா யினரே கலங்கியுமே மேவிய தூதனு மேமெதுவாய் மேலமை கல்லையே தொடவுடனே பூவினிற் கல்லுமே சாய்ந்துவிழ மேலமர்ந் தனனே புனிதனுமே. |