பக்கம் எண் :

358

 

247.       முடிகிறதே வாரமுதல் நாளிரவே விடிகிறதே வாரமுதல் நாட்பகலே
              அடிவான்வெ ளுத்துவரு முன்னரேதான் அதிகாலை யாத்வனே தோன்றுமுனே
              துடியாயெ டுத்தனரே கந்தவர்க்கம் தூயமன துள்ளவரா மாதருமே
              கடிதினிலே சென்றனரே கல்லறைக்கே கனஞ்செயவே காவலனின் சடலமதை.

248.       வந்தனரே மக்தலீனாள் யோவனாளும் மற்றமரி யம்மாள்சா லோமியுமே
              அந்தமுறுங் கல்லறையை மூடியகல் மாவதிகப் பாரமுள கல்லேயாம்
              எந்திவிதந் தள்ளுவோமோ இக்கல்லையாரெமக்கே வந்துதவு வாரென்றார்
              வந்தவரே கல்லறையை யண்டிவர மாட்சிமிகு சம்பவத்தி னாலதிர்ந்தார்.

III. 1. ஜெய காண்டம். சாத்தானைவென்ற பர்வம் முற்றிற்று

III. 2. ஜெய காண்டம்.
மாரணம் வென்ற பர்வம்

மரணமுண்டே மறம்பயனாய் மாண்டுபோகு மானுடர்
மரணமில்லா ஜுவனுய்ய மாண்டழிந்த தேகமே
திரனடைந்தே மரணநின்றே சீர்மகிமை யோடெழ
மரணமுண்டே மரணவென்ற மன்னனைவ ணங்குவோம்.

171. வானவர் கொண்டாட்டம்.

1.           மண்ணவாக் கெனவுயி ரீய்ந்தவரை மரணமே தடைசெயக் கூடியதோ
              அண்ணலா ருடலையே கல்லறையுள் ளடக்கிவைத் திருப்பதுங் கூடியதோ
              கண்ணயர் கிறிஸ்துவே யெழும்புவதைத் தடைசெய முடியுமோ கல்லினாலே
              விண்ணவர் மகிபனே யுயிர்த்தெழுந்தார் வெளிப்படு மொருஜெய வேந்தனென.

2.          மண்ணிதில் மனுமக னுயிர்த்தெழவே மரணமு மலகையும் வென்றவராய்
              விண்ணிலே யமரரா மனைவருமே வியந்தன ரெழுந்தேயார்த் தனரேமிக
              பண்ணினுக் கிசைவாய் நடித்தனரே பலவித மாய்மகிழ் கொண்டனரே
              பண்ணொடு துதித்தனர் பரமனையே புகழ்ந்தன பரவச மாயினரே.