243. திருடுவது மேயலாதே தீயரவர் திடமொடும்பொய் சொல்லுவாரு யிர்த்தனென இருள்மதியார் பொதுஜனம யங்குவாரே யிப்புளுகோ முன்புளுகில் மாகொடிதாம் ஒருபொழுது மிதுநடலா தேயிருக்க யூகமொடே பத்திரமாய் ராப்பகலாய் திரிதினமே கல்லறைக்கே காவலிட திட்டமாயோர் கட்டளையே யிட்டருள்வீர். 244. காவலாரும் வேலையே பாருமேநீர் காவலிடச் சேவகுரு முண்டுமக்கே ஆவலாகச் சென்றுமேயக் கல்லறையைப் பத்திரமாய்க் காவலேசெய் வீரென்றான் மேவியவர் சென்றனரே கல்லறைக்கே மேலமைந்த கல்லையுமே முத்திரித்தார் காவலுமே வைத்தனரே கல்லறைக்கே காத்தனரே கல்லறையைப் பத்திரமாய். 245. ஓய்வுதினத் தில்மெய்யே யோய்ந்திடினும் ஓய்வுமெய்யா யார்க்கெனினு மேயுளதோ ஓய்வுளதோ ஆதிபன்பி லாத்துவுக்கே யுண்டுநிசம் வேதைமனச் சாட்சியிலே ஓய்வுளதோ அர்ச்சகர்க்குஞ் சார்ந்தவர்க்குந் தோன்றுவாரு யிர்த்தெழுவா ரென்றையமே ஓய்வில்லையே சீடருக்கும் நம்பகமே யற்றொழிந்து சஞ்சலமுற் றாரவரே. 170. ஞாயிறு காலை. மத். 28 : 1; மாற். 16 : 1 - 4; லூக். 24 : 1; யோ. 20 : 1. 246. ஓய்ந்ததேயே ழாவதுநா ளின்பகலே ஓய்வுதின மாஞ்சனிநா ளோய்ந்ததுவே ஓய்ந்ததுவே மாரணமென் நித்திரையே ஓய்வுதின ஆண்டவராம் நாதனுக்கே ஓய்ந்து மர ணப்பயமே தீர்ந்ததிப்போ உண்மையாய் ரட்சகரை யண்டினர்க்கே ஓய்ந்ததுவே கல்லறையின் காவலுமே ஓய்ந்ததுவே காவலாளர் வேலையுமே. |