238. அந்தரங்க சீடரான அவ்விருவர் அவரவர்தம் நோக்கமுமு டித்தவராய் வந்தவர்கு ரூசடியிற் பத்திரமாய் மரமிருந்தே கீழிறக்கி னார்சடலம் நிந்தைதனை நீக்கியதைச் சீர்ப்படுத்தி விமரிசையாய் யூதரின்வ ழக்கம்போல் பந் தனஞ்செய் தாரதையோர் சீலையினாற் பொதிந்தனரே பண்பொடுசு கந்தமொடே. 239. அருகிருந்த தோட்டமதி லேயுளதாம் அகத்தினிலே தூய்மையொரு கல்லறையில் பெரியபாரில் வெட்டியதாங் கல்லறையே பிறர்க்கல்ல தனக்கெனவே யோசேப்பே அருமையாயே யாயத்தஞ் செய்ததுவே யதுவரையும் யாரையும டக்கினதில் நெருங்கியதா லோய்வுதினஞ் சீக்கிரமாய் நிமலனையே யடக்கினாரக் கல்லறையில். 240. அடக்கியொரு கல்லினாலே மூடியதை யகன்றனரே யங்கிருந்தே யவ்விருவர் இடமதையே நீங்கமன மற்றிருந்தார் இருமாதர் ராவரைக்கும் கல்லலைமுன் நடந்தவையாம் யாவையுமே பார்த்தனரே நலமொடேய டக்கியத லத்தையுமே திடமிகவாம் பாசமேபிணித் தவர்போல்தியங் கியேதரித்தன ரவர்தாமே ராவரைக்கும். 241. திரும்பினரே தூயமன மாதருமே யோய்வுதின மேதுவக்கு முன்னரேதான் திருக்குருவுக் கந்தியத்திற் செய்கடமை தீர்ந்ததில்லை துக்கமிகக் கொண்டவராய் திருத்தினத்துக் காயத்தமே யானவராய்த் திட்டமாயே யோய்வுதின மோய்ந்திடராய் திருத்தினவோய் வேமுடிய வாசமுறுந் திரவியசு கந்தமுமே சேகரித்தார் சுகந்தமிடவே. 242. ஆதவனு மஸ்தமன மாகவுமே யாயத்தநா ளாந்தினமு டிந்துவிட பாதகராச் சாரியர்பர் சேயருமே மாபணிவாய் வந்தனர்பி லாத்திடமே மேதகரே யாமறிவே மெத்தனின்சொல் மெய்யாயெ ழும்புவேனே மூநாளில் சூதராம வன்சிஷியர் ராத்திரியே சூதொடவ னங்கமெடுத் தேகுவரே. |