20. உயர்திரு மகனார் உனதமே யெழும்பே உயர்த்துமுஞ் சிரங்கள் உயர்வா சலெலாம் உயர்வீ ரனாதி கதவுகா ளுயரும் உயருவீர் மகிமையின் அரசனுட் செலவே. 21. இவர்யார் எவரிம் மகிமையி னிறைவன் இவர்யா ரிவர்க்கெஞ் சிரங்களே றெடுக்க இவர்சே னைகளின் கர்த்தரெம் பரனே இவர்தா மகிமையி னிறைவனா மெகோவா. 22. உன்னதங் களிலே யோங்கவோ சியன்னா மண்ணில மிருந்தே மாட்சியோ டெழுந்தார் நன்னய மொடுமே நாந்துதி செயுவோம் உன்னத கோடா கோடிய ரொன்றாய். 23. ஓசனா வுமக்கே உன்னதர் மைந்தா ஓசனா வுமக்கே உன்னதத வேந்தா ஓசனா வுமக்கே ஒப்பிலா வீரா ஓசனா ரட்சிப் பாதிப னுமக்கே. 24. மண்ணவர்க் கெனவே மாண்டுயிர்த் தெழுந்தோர் உன்னத அமரரின் ஓசனாத் துதியோ டுன்னத மெழுந்தே உன்னதர் வலபால் உன்னதா சனமே வீற்றன ருவந்தே. 25. மண்ணிலம் வரும்நாள் வகையொடு மெடுத்த மண்ணிய லுளதாம் மரித்தவோர் சடலம் விண்ணுல கினுக்கே வியர்த்தமா மெனவே விண்ணெழுந் தினத்தில் வெறுத்திகழ்ந் தனரோ. 26. மண்ணிய லுளதாம் மகிமையில் சடலம் விண்ணுல கினில்விண் மகிமையே யடைய மண்ணிய லகற்றி மகிமையே யளித்தே விண்ணினுக் குரிய மேன்மையோ டெழுப்பி. |