பக்கம் எண் :

378

 

27.        விண்மகி மையேகொள் விண்ணிய லணிந்தே
              விண்ணவர் தொழுங்கோன் விண்ணுல கெழுந்தே
              விண்ணவர் வணங்கும் விண்ணா சனத்தில்
              விண்பிதா வொடுமே வீற்றமர்ந் தனரே.

28.        மண்ணிலத் தவரே மரணமுள் ளானோர்
              மண்ணில மதிலே மரித்துவீழ்ந் தாலும்
              மண்ணியல் சடலம் மறைந்தொழிந் தாலும்
              விண்பதி வரும்நாள் எழும்புவர் மீண்டே.

29.        மரணவென் றவராம் மரித்துயிர்த் தவரால்
              மரணத் தாலே மாண்டுபோ னவரின்
              மறைந்ததாஞ் சடலம் மரணகட் டறுத்தேதாம்
              மரணமே யிலதாம் மகிமை யோடெழுந்தே.

30.        மகிமையுற் றவராம் மனுமக னொடுமே
              மகிமையாந் தலத்தில் மகிழ்ந்துயு மெனவே
              மகிதலத் துளராம் மனுடரெங் களுக்கே
              மகிழ்ச்சிநம் பகமே மகத்துவ ரளித்தார்.

31.        பாவியே யுனக்காய் பரனுல குதித்தார்
              பாவியே யுனக்காய் பரனுயிர் துறந்தார்
              பாவியே யுனக்காய் பரனுயித் தெழுந்தார்
              பாவியே யுனக்காய் பரன்பர மெழுந்தார்.

32.        பாவியே பணிவாயே பரன்திருப் பதமே
              பாவியே யறிக்கைசெய் யுனின்பவ முணர்ந்தே
              பாவியே யருள்வார் பரன்பவ மனிப்பே
              பாவியே யடைவாய் பரத்தினில் மகிமை.

184. தூதர் வாக்கு - சீடர் எருசலேமுக்கு ஏகல்.லூக். 24 :52. 53; அப். 1 :
10 - 12.

33.       ஆங்கமர் சீடரண் ணாந்துமே நோக்கி
              ஏங்கியே நின்றனர் யேசுவைக் காணார்
              ஆங்கிரு தூதரே நின்றவ ரருகே
              நீங்களண் ணாந்திவண் நிற்கிற தேனோ.