34. இப்படி யுமதிட மிருந்து மே யுனதம் இப்படி யெடுபடும் யேசுவா மிவரே எப்படி யுமது கண்முன்னெழுந் தனரோ அப்படி யவர்வரு வார்திரும் பியுமே. 35. இப்படி வீணாய் இங்குநிற் காதீர் சொற்படி போவீர் சொல்லிய பதீக்கே அப்படிச் சீடரே அதிகளிப் பொடுமே அப்பனைப் பணிந்தே யம்பதி யடைந்தார். 36. உன்னத மெழுந்தோர் உயர்பர னியேசு நன்னய மொடுமே நவின்றநல் லுரையாம் உன்னத மிருந்தே யுயர்பலம் வரவே அந்நக ரினிலே யமர்ந்துகாத் திருந்தார். 37. இனமொடும் மேல்வீட் டற்சகோ தரங்கள் கனமுறு மாதா கண்யமா தரொடும் தினந்தரித் தாரே வேண்டுதல் ஜெபத்தில் தினமுமா லயத்தில் தேவனைத் துதித்தே. 1. மகிமையாந் தலமே மகிமையைக் களைந்தாய் மகிமையற் றவராய் மகிதலமே பிறந்தாய் மகிமைரட் சையே மகிமையாய்ப் புரிந்தாய் மகிமையுள் ளெழுந்துனின் மகிமையை யணிந்தாய். 2. விண்ணவர் தொழுகைவிண் ணுலகையும் விடுத்தாய் மண்ணுல கடுத்தொருமா னுடனாக ஜெனித்தாய் மண்ணவர்க் கெனவே மரித்துயிர்த் தெழுந்தாய் விண்ணுல கெழுந்துவிண் ணரியணை யமர்ந்தாய். வேறு 3. சர்ப்பத்தாற் றவறிழைத்துத் தப்பினரே ஒப்பற்ற உயர்பரனோ டொப்புரவாய் தப்பிற்சற் புத்திரரே யாவற்கே ஒப்பற்ற உயர்மகனு தித்துலகில். |