83. நன்றிதா மரியதோர் சாட்சியையே நவின்றனன் அருளனென் தீக்ஷகனே என்றிவன் அருள்முழுக் கீய்ந்ததலம் நதியின் குருதலம் பெத்தபரா அன்றுமே கடந்தே யடுத்ததினம் அவனிடம் அருட்பரன் ஜேசுவந்தார் இன்றுமே திடமிகு சாட்சிதந்தான் எமதுட குருபரன் ஜேசுவுக்கே. 84. "உலகிதின் பவமதாம் பாழ்சுமையே யுவப்பொடு மேற்றுமே சுமப்பவராம் உலகிது புரக்கவே வந்தவரே உனதராங் கடவுளின் மறியிவரே பலமொடு முன்னொரு நாளுமக்கே பகர்ந்தேன் சாட்சியேன் அவரிவரே நலமொடு மெனதுபின் வந்திருந்தும் இருப்பவர் நாட்களே துவங்குமுனே. 85. "எனிலுமேன் மையுளோ ரென்றுரைத்தும் இவரையா லுண்மையா யறிந்ததில்லை ஜனமதா மிஸரவேல் ஜாதியர்க்கே இவர்வெளிப் படயான் சாட்சியே இனமொடு ஜலமதாற் றிருமுழுக்கே யிவர்களுக் கேதர வந்தவனே இனமொடு மினுஞ்சொலும் வாக்கையுமே இருதயங் கொள்வீ றென்றனனே. 86. அரூபியாந் திருவரு ளாவியரே அணுகவே லாததோர் பரமிருந்தே உருவமே கொண்டுபு ருவடிவாய் உவந்தவர் மாட்சியார் சிரமேலே அருமையா யிறங்கியே தங்கியதைத் திருமுழுக் கேபெறுந் தினமறிந்தேன் திருமக னிவரென யானடியேன் அறிந்திலேன் திட்டமா யதுவரைக்கும். 87. "தீக்ஷையான் கொடுக்கவே தீர்த்தமதாற் றேர்ந்தெனை யனுப்பின ராம்பரனே சாக்ஷியா யெவர்சிர மேலிறங்கக் காண்பாயோ சத்திய ஆவியரை சாக்ஷியா முனக்கிது இப்பெரியார் சத்தியர் திருவரு ளாவியரால் தீக்ஷையே கொடுப்பவ ராவரெனத் திட்டமாய்த் தெரியவே செப்பினரே. 88. "கண்டுளே னதுவித மொருதினமே கனிவொடு முழுக்கே பெறுந்தினமே விண்ணினின் றருட்டிரு ஆவியரே விரைந்தவர் சிரமே லமரவுமே விண்டியான் பகருமோர் சாட்சியிதே வினைதவிர் திருமக னிவரெனவே கண்டறிந் துணர்வீர் நீவிரெலாங் கடவுளின் கிறிஸ்தே யிவரெனவே. 89. ஆண்டுநின் றானவன் மறுதினமும் அவனது சிஷியரா மிருவரொடே கண்டனன் ஜேசுவுமே வருவதையே அவரையே காட்டினன் சிஷியருக்கே விண்டனன் சாட்சியே யிதுதினமும் கடவுளின் மறியென மிகுசிறப்பாய் கண்டவ ரவ்விரு வருமறிந்தே கணமதிற் றொடர்ந்ததனர் திருப்பரனை. |